நான்கு வயதில்
மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்லி
பள்ளிக்குச் சென்ற அண்ணன்
சொல்லிச் சென்று
பேய் குறித்து அசை போட வைத்தவன் என்னை
ஆறு வயதில் கட்டெறும்பு காலில் ஏற
அம்மா என்று அலறிய என் காலிலிருந்து
விரட்டி அடித்தவன் அவன்
நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்
என்று சுற்றித் திரிந்த நாளில் ஒன்றாய்ச் செய்த
குறும்புகள் எண்ண ஆரம்பித்தால் முடிவு காணாது
பட்டம் செய்ய சொல்லித் தந்ததும் அவனே
திண்ணை ஏறி குதிக்கத் தூண்டியதும் அவனே
கிரிக்கெட் கற்றுக் குடுத்ததும் அவனே
கில்லி ஆடி ஆடி ஜெயத்ததும் அவனே
செய்பொருட்கள் ஒவ்வொன்றாய்ச் செய்தான்
நானும் ஒரு நகல் செய்து முடித்தேன்
பாலத்தின் அடியில் ஊர்ந்து சென்றேன் அவனோடு
ஒன்றா இரண்டா அவ்வித நாட்கள்
பட்டாசை திருடி வெடித்து
என்னை அழ வைத்த அண்ணன்
காரணத்தோடு தான் செய்தான் போலும்
சண்டையும் இட்டோம்
சமரசமும் அடைந்தோம்
ஏனோ மனதில் சஞ்சலம் அடைந்தேன்
பருவத்தில் மலர்ந்த நான்
பள்ளியில் கூட பல சமயம் அழுதேன்
வளர்ந்ததும் ஏனோ அண்ணனிடம்
அவ்வளவு பேசவில்லை
எல்லாம் அந்த குழப்பத்தினாலே
பிரிந்த பிறகு மீண்டும்
தொடர்ந்தோம் கடிதத் தொடர்பில்
உடல் நிலை சரியில்லாத போதெல்லாம்
அன்பாய் கவனித்த டாக்டர் அண்ணன்
இன்று இருப்பது பதினாலாயிரம்
கிலோமீட்டருக்கு அப்பால்
இருந்தும் என் மனதில் அருகில்
இருப்பதாகவே பிரமை எனக்கு எப்பொழுதும்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அண்ணனிற்கு தாங்கள் இயற்றிய வரிகளில் கடந்தகாலத்தை நோக்கி பயணிக்கிறது என்மனம் தோழி
பாசத்தில் திளைக்கும் மனம் நேற்றையப் பொழுதுகளில் நெக்குறுகும் காட்சிக் காண முடிகிறது. சிறு வயது வாழ்க்கையை இழந்து தவிக்கும் மனம்..... இன்னும் அந்த இனிய நினைவுகளில் நிகழ்காலம். சொல்ல முடியா சோகத்தை மெல்ல முடியாமல் மெல்லும் கவிதை.
திருத்தம்...
அழுக என்பதை அழ என மாற்றவும்.
பிரம்மை என்பதை பிரமை என மாற்றவும்.
நல்ல கவிதைக்கு நன்றி.
பாசமலர்....சீக்கிரம் உங்கள் அண்ணனை பாருங்கள்
very nice... very touchful writting
அண்ணாவின் மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிகிறது மீனா..பருவம் மாறியதும் பாசங்களும் திசை திரும்புவதும் வாழ்கையாகிவிட்டது..ம்ம்ம்ம்
//பாசத்தில் திளைக்கும் மனம் நேற்றையப் பொழுதுகளில் நெக்குறுகும் காட்சிக் காண முடிகிறது. சிறு வயது வாழ்க்கையை இழந்து தவிக்கும் மனம்..... இன்னும் அந்த இனிய நினைவுகளில் நிகழ்காலம். சொல்ல முடியா சோகத்தை மெல்ல முடியாமல் மெல்லும் கவிதை.//
எப்படி சார் என் மனதை இவ்வளவு அழகாக புரிந்து கொண்டீர்கள்?
நீங்கள் சைக்காலஜி அறிந்து இருக்கிறீர் போலும்
விரைவில் நிகழ்காலத்தை முழுவதுமாக ரசிக்கக் கற்று விடுவேன் என்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது . உங்களுடைய தொடர் கருத்துரைகளுக்கு நன்றி.
நான் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறேன்
//அண்ணனிற்கு தாங்கள் இயற்றிய வரிகளில் கடந்தகாலத்தை நோக்கி பயணிக்கிறது என்மனம் தோழி//
நன்றி. கவிதை பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி
சௌந்தர், சுதா மற்றும் தமிழரசி அவர்களே உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி
கவிதை பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி
ஈரோடு பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்...
சில ஆக்கப்பூர்வான செய்திகளின் எதிர்பார்ப்புக்கள்...
ஒரு பருவமாற்றத்தினை
பக்குவமாக சொல்லி
இலையுதிர் காலத்தில்
இளகுவதும் அருமை...
உங்கள் அண்ணனை சந்திக்க தம்பியின் வாழ்த்துக்கள்...
Post a Comment