Thursday, December 16, 2010

மேல்நிலைப்பள்ளி

ஆசிரியையை கிண்டலடிக்கும்
மாணவர்கள்

நேர் கோட்டில் மட்டுமே நடக்கும்
தமிழ் ஆசிரியர்

தத்துவம் புகட்டும் இரசாயனம்
ஆசிரியர்

தாடியுடன்
உயிரியல் ஆசிரியர்

சன்னமாய்ப் பேசும்
இயற்பியல் வாத்தியார்

பேசிப் பேசி மகிழும்
மாணவ மணிகள்

திங்கட்கிழமை பாடிய
தமிழ்த் தாய் வாழ்த்து

கணீரென்ற
பள்ளி மணி

அகன்று விரிந்த
மைதானம்

இத்தனையும் கொண்டதாம்
எங்கள் மேல்நிலைப்பள்ளி.

7 comments:

arasan said...

எந்த ஊர்ல இருக்குங்க உங்கள் மேல்நிலை பள்ளி...
//பேசிப் பேசி மகிழும்
மாணவ மணிகள்//

இப்போ எங்க பேசிக்கிறாங்க அதன் அலைபேசி வந்துவிட்டதே .. எல்லாம் குறுஞ்செய்தி தான்...
அப்போ எல்லாம் பேசி பேசி விளையாண்ட அந்த பொக்கிஷ நிமிடங்கள் திரும்ப கிடைக்குமா.....


//திங்கட்கிழமை பாடிய
தமிழ்த் தாய் வாழ்த்து//

திங்கள் கிழமை மணியடித்தால் எனக்கு எப்படா இந்த வெள்ளிகிழமை வரும் என்று மனசு ஏங்கும்...


என்னை என் பள்ளி காலத்திற்கு கூட்டி சென்றமைக்கு என் இதயங்கனிந்த நன்றிகள்

Unknown said...

//பேசிப் பேசி மகிழும்
மாணவ மணிகள்//
வகுப்பறையில் பேசிக்கொள்வது தான் எவ்வளவு சுவையானது..
//தாடியுடன்
உயிரியல் ஆசிரியர்//
உங்க அட்டகாசம் தாங்க முடியாமையா?
அவ்வளவு விரக்தி?

Unknown said...

எங்க வலைப்பூவுக்கு வந்து பாருங்கள் மேடம்...

Meena said...

அதென்ன எங்க வலைப் பூக்கள்?
நீங்கள் பின்தொடரும் வலைப்பூக்களோ?

Meena said...

அரசன் அவர்களே
வியாக்கியானம் அருள்வதில்
நீர் ஒரு பேரரசர் போலும்.

நம் பள்ளி சேரன் மா நகரமாய் இருந்த
கோவையில் மணி போன்ற மணி மேல் நிலைப் பள்ளி

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற தட்டுப் பாட்டினால் உங்கள் வியாக்கியானம் ஒவ்வொன்றுக்கும் பதில்
எழுத விரும்பினாலும் முடிவதில்லை

yogachandher said...

meena
i am witnessing your spiritual maturity friend
your daily schedule very crisp and intelligent. your Varnanai about our teachers put me back in those benches i used to sit in mhs. It was rejuvanating. Thank you meena. vazhga valamudan
yogachandher

R KRISHNAN said...

Hi Meena,

Your words brought again the memories of lovely times we had in the school and our class re-union on 19th Dec rekindled those joyful experiences. Wow, what a day it was! Missed you and others very much... Hope to see you on Sep 2011 re-union in Trichy. Hope you will be able to make it...