Monday, December 27, 2010

வலி எடுத்து விட்டது

வினை தீர்க்கும் விநாயகனே
விவேகக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

மருதமலை மாமணியே முருகையா
மகர தீபக் குழந்தையைக் கருவில் கொடுத்தாய்

கருணைத் தேவன் கண்ணா
கருணைக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

நீதி தவறா நீலகண்டா
நீதிக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

வேதம் அருளிய வேங்கடவா
வேள்விக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

காமம் படைத்த மன்மதா
காமக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

உவப்பளிக்கும் உற்சவ மூர்த்தியே
உற்சாகக் குழந்தையை கருவில் கொடுத்தாய்

இத்தனையும் கொடுத்த நீ
குழந்தைகளை
என்றைக்கு பிரசவிக்கப்
போகிறாய்
வலி எடுத்து விட்டது
வந்து விடு விரைவில்

3 comments:

Thamizhan said...

பாவம் ! ஆண்டவனைக் காப்பாற்றவே ஏ கே 47 வேண்டியுள்ளது.இத்தனை ஆண்டவனும் காப்பாற்றக் காத்திருந்தால் டாக்டர் செசேரியன் செக்சன் என்று அறுவைச் சிகிச்சை தான்.அனைத்திற்கும் அறுவைச் சிகிச்சை எனும் புரட்சியே தான் வழி.மக்கள் புரட்சி கருவுற்றுப் பிறக்கும்,கட்டாயம்.

arasan said...

அருமையான வரிகள் ...

தமிழ்க்காதலன் said...

நான் கருவுற்றிருக்கிறேன்... காத்திருங்கள்..... கவிதைக் குழந்தை காண்பீர்கள்...? இதை கடவுளும் தர முடியாது....
இதிலும் இடுப்பு வலிக்கும்... எலும்பு நொறுங்கும்.... கண்கள் சொருகும்.... காத்திருங்கள்.... கவிதைக்காய்..