Wednesday, December 8, 2010

பார்வை

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

ஆடவர் கண்ணுக்கு எந்த
ஒரு பெண்ணும் எவ்விதம்?

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை

என்று சொன்ன கண்ணதாசன்
பெண்ணின் மனம் அறிந்ததில்லை

கல்லூரி நாளில் கண்டு கண்டு
களித்த நந்தவனத்து மலர்கள்

இன்று காணாமல் போயின
என்று எவன் சொன்னது?

பெண்கள் இல்லாத இடம்
பாலை வனம் என்று தானே
அவன் சொன்னான்

மகளிர் கல்லூரியில் மிரண்டு போகும்
அந்த ஒரே ஒரு ஆண் வாத்தியாரும்
அமிர்தம் என்று தானே அவள் சொன்னாள்

ஆண் பார்வை, பெண் பார்வை என்றப்
பிரிவினை இல்லை இங்கு

பார்வைக்கு என்றும் பஞ்சம் இல்லை
பார்வைக்கு என்றும் பஞ்சம் இல்லை

2 comments:

sslaxman said...

"கண்ணதாசன்
பெண்ணின் மனம் அறிந்ததில்லை"
நான் கண்ணதாசனின் விசிறி...
அதனால் இந்த கருத்தில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை... பெண்களின் மனதை பற்றி, அவர்களின் சிந்தனை ஆழத்தை பற்றி எத்தனையோ சிறப்பான பாடல்களை எழுதியுள்ளார்

Meena said...

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை

கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை

தூய அன்புடன் உலகில் வசித்து வரும் பெண்
ஒருத்தி கண்ணனை எவரிடத்தும் காண்பாளே

கண்ணனுக்குத் தந்த உள்ளத்தை
பிறருக்கும் தருவாளே

கண்ணதாசன் இத்தகைய பெண் மனதை
வர்ணிக்க வில்லை போலும்

கண்ணதாசன் பெண் மனதை அறிந்ததில்லை
என்பதை விட மேற்கண்ட பெண் மனதை அறிந்ததில்லை என்பதே சரியாகும்