Sunday, September 1, 2013

கிருஷ்ண கீதம்

பயணங்கள் முடிவதில்லை
எனக்குள் இருக்கும்
பைரவர் கேட்கிறார்
நான் என்ன கடவுளா
எது  செய்தும்
style="background-color: white; color: #1d2129; கோபப் படாமல் இருக்க
 
நான் என்ன ஞானியா
எதற்கும்
கவலையற்று  இருக்க
 
கேட்கின்றனர்
நம்முள் பலர்.
 
கடவுள் குணத்தை
கற்றுத் தர
பெற்றுத் தர
அவதார புருஷர்
சிலர் இருக்க
 
நம்பாதே 
அவதார புருஷர்களை 
சொல்லக் கேட்க 
 
சும்மா இருப்பாரோ
நம் போல் சிலர்
 
குழலூதும் கிருஷ்ணன்
நம்மருகில்  எப்பொழுதும்
எவ்விடத்தும்
 
கிருஷ்ணனை  பார்த்தே
அடி ஒன்றும்
எடுத்து வைப்போம்
 
கிருஷ்ணனை மட்டும்
நோக்கிடுவோம்
 
கிருஷ்ணனை கணம்
ஒவ்வொன்றில் மனதுள்
வைத்தால்
 
சோம்பி நின்ற பாதங்கள்
தாளம் போடும்
சிலையாய் நின்ற
இடையும் தான்
தனி என்று
தீராத நடனமிடும் 
 
மெய் மறந்து 
மெய் முழுக்க 
மின்னல் வேகம் 
மின்னித் துள்ளும்
 
விழிக்க மறந்த 
விழிகளும் 
விளையாடித் துள்ளும்  
 
களைப்பை மட்டும் 
களையாய் தந்த 
முகம் கூட 
மாறும் ஜீவக் 
களையாய் 
 
இயற்கையான மாற்றம் 
தரும்
அவதார புருஷர் 
இயற்கையன்றோ 
 
நம்மில் நம்பாத பலரை
நம்மில் சிலர் நம்ப
வைப்போம்
 
வாழ்க கிருஷ்ணன் லீலை 
வாழ்க கிருஷ்ணன் கீதம்