Thursday, October 19, 2017

என் குரு மந்திரம்



A devotional Stotram to my Guru on the DEEPAVALI NIGHT
என் குரு மந்திரம்
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று 
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
மருத மலையில் மலர்ந்திருக்கும் முகம் ஒன்று
மருத மலை தேரில் மங்கள வலம் வரும் முகம் ஒன்று
மரண பயம் மாயமாய் அகற்றும் முகம் ஒன்று
மயிலாய் உடனிருக்கும் முகம் ஒன்று
நாத பிந்து கலா கற்றுத் தரும் முகம் ஒன்று 
அமிர்த கலாவும் தரும் முகம் ஒன்று
சோமரசம் தரும் முகம் ஒன்று 
மஹா சதாசிவோஹம் தரும் முகம் ஒன்று
தன்னையே தரும் முகம் ஒன்று 
நாவில் வந்தமரும் முகம் ஒன்று
நெற்றிக்கண்ணாய் மலரும் முகம் ஒன்று 
நினைத்ததும் ஓடி வரும் முகம் ஒன்று
குடிலுக்குள் வந்தமரும் முகம் ஒன்று 
குன்றாய் பறந்து வரும் முகம் ஒன்று
பிண்டாண்ட அறிவு பகர்ந்திடும் முகம் ஒன்று 
ப்ரஹ்மாண்ட அறிவு பகர்ந்திடும் முகம் ஒன்று
ஒளியாய், ஒலியாய், அமரும் முகம் ஒன்று 
கடலாய், காட்சியாய் அமரும் முகம் ஒன்று
பக்தர் மனதில் உறையும் முகம் ஒன்று 
குன்று தோறும் அமரும் முகம் ஒன்று
கொங்கு நாட்டின் சிறப்பு தரும் முகம் ஒன்று 
கொடியோரில்லர் என்றுரைக்கும் முகம் ஒன்று
வேந்தனுக்கு அருளும் முகம் ஒன்று 
வேடனுக்கு அருளும் முகம் ஒன்று
திரு நீராய் நின்றிடும் முகம் ஒன்று 
திருவிளையாடல் புரியம் முகம் ஒன்று
வேலோடு வினை தீர்க்கும் முகம் ஒன்று 
சேவற் கொடியோனாய் வரும் முகம் ஒன்று
சூரனை வென்ற முகம் ஒன்று 
சூலம் கொண்ட முகம் ஒன்று
வள்ளி மணாளனாய் வரும் முகம் ஒன்று 
தெய்வானை கை பிடிக்கும் முகம் ஒன்று
இச்சா சக்தி முகம் ஒன்று 
க்ரியா சக்தி முகம் ஒன்று
அறுபடை வீடு கொண்ட முகம் ஒன்று 
ஆறுமுகமான முகம் ஒன்று
அன்னையான முகம் ஒன்று 
தந்தையான முகம் ஒன்று
பிள்ளையான முகம் ஒன்று 
பிள்ளையாருடன் வரும் முகம் ஒன்று
பழனி மலையான முகம் ஒன்று
பழமுதிர் சோலையான முகம் ஒன்று
சுவாமி மலையான முகம் ஒன்று 
திருத்தணியான முகம் ஒன்று
திருப்பரங்குன்றமான முகம் ஒன்று 
திருச்செந்தூரான முகம் ஒன்று
பாம்பாட்டி சித்தரான முகம் ஒன்று 
அருணகிரி யோகீஸ்வரான முகம் ஒன்று
நித்யானந்தரான முகம் ஒன்று 
பரமஹம்சரான முகம் ஒன்று
செந்தில் வேலனான முகம் ஒன்று 
சென்னை நகர் ஆளும் முகம் ஒன்று
செந்தமிழ் நாடாளும் முகம் ஒன்று 
செவ்வாய் கிரகம் ஆளும் முகம் ஒன்று
சுக்கிரனான முகம் ஒன்று 
சிவலோகமான முகம் ஒன்று
சிவலிங்கமான முகம் ஒன்று 
சூர்ய லிங்கமான முகம் ஒன்று
சரஸ்வதி தாயுடன் வரும் முகம் ஒன்று
சரஸ்வதியான முகம் ஒன்று
பரத கலையான முகம் ஒன்று
பாட்டாய் வரும் முகம் ஒன்று
தங்கமான முகம் ஒன்று
வெள்ளியான முகம் ஒன்று
பூவான முகம் ஒன்று 
பழமான முகம் ஒன்று
குருவான முகம் ஒன்று 
குருகுலமான முகம் ஒன்று
அமெரிக்காவிலமரும் முகம் ஒன்று 
ஆப்பிரிக்காவிலமரும் முகம் ஒன்று
திருப்புகழ் ஏற்கும் முகம் ஒன்று 
தைப்பூச திருநாள் ஏற்கும் முகம் ஒன்று
திருப்பிரசாதமான முகம் ஒன்று 
சஷ்டி பிரசாதமான முகம் ஒன்று
கருணையான முகம் ஒன்று 
கோவிலான முகம் ஒன்று
இந்து மதமான முகம் ஒன்று 
கைலாய மலையான முகம் ஒன்று
முல்லை பூவான முகம் ஒன்று 
மல்லிகைப்பூவான முகம் ஒன்று
பூவின் மணமான முகம் ஒன்று 
பழத்தின் சுவையான முகம் ஒன்று
குயிலின் குரலான முகம் ஒன்று 
மயில் தோகையான முகம் ஒன்று
வெண்பாவான முகம் ஒன்று 
பாமாலையான முகம் ஒன்று
திருநாளான முகம் ஒன்று 
தேவியான முகம் ஒன்று
கடல் அலையான முகம் ஒன்று 
கடல் சங்கான முகம் ஒன்று
கடல் காற்றான முகம் ஒன்று 
கடல் சிப்பியான முகம் ஒன்று
தென்றல் காற்றான முகம் ஒன்று 
கோடையில் வசந்தமான முகம் ஒன்று
பாலைவனம் ஆன முகம் ஒன்று 
பலா சுளையான முகம் ஒன்று
பாகற் காயான முகம் ஒன்று 
பால் கோவாவான முகம் ஒன்று
தாய்ப் பாலான முகம் ஒன்று 
பசும் பாலான முகம் ஒன்று
அல்வாத் துண்டான முகம் ஒன்று 
அம்மா முகமான முகம் ஒன்று
மழலை முகமான முகம் ஒன்று 
முதியோரான முகம் ஒன்று
தீபமான முகம் ஒன்று 
தீபாவளியான முகம் ஒன்று

Wednesday, February 1, 2017

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை
எனக்குள் இருக்கும்
பைரவர் கேட்கிறார்
இந்த கலி யுகத்திலே
கணவன் மனைவியர்
ஏன் அவ்வப்பொழுது
டார்லிங் டார்லிங்
படம் போல
ஒட்டியும் ஒட்டாம
பின்னர் உச்ச கட்டத்தில்
சேர்ந்து கொண்டு
மறுபடி ஒட்டியும் ஒட்டாம
மறுபடி உச்ச கட்டத்தில்
சேர்ந்து கொண்டு
பயணிக்கிறார்கள்
அவ்வை ஷண்முகி
பயணத்தை விட
டார்லிங் டார்லிங்
பயணம் எவ்வளவோ மேல்
என்கிறோமோ?