Sunday, September 1, 2013

கிருஷ்ண கீதம்

பயணங்கள் முடிவதில்லை
எனக்குள் இருக்கும்
பைரவர் கேட்கிறார்
நான் என்ன கடவுளா
எது  செய்தும்
style="background-color: white; color: #1d2129; கோபப் படாமல் இருக்க
 
நான் என்ன ஞானியா
எதற்கும்
கவலையற்று  இருக்க
 
கேட்கின்றனர்
நம்முள் பலர்.
 
கடவுள் குணத்தை
கற்றுத் தர
பெற்றுத் தர
அவதார புருஷர்
சிலர் இருக்க
 
நம்பாதே 
அவதார புருஷர்களை 
சொல்லக் கேட்க 
 
சும்மா இருப்பாரோ
நம் போல் சிலர்
 
குழலூதும் கிருஷ்ணன்
நம்மருகில்  எப்பொழுதும்
எவ்விடத்தும்
 
கிருஷ்ணனை  பார்த்தே
அடி ஒன்றும்
எடுத்து வைப்போம்
 
கிருஷ்ணனை மட்டும்
நோக்கிடுவோம்
 
கிருஷ்ணனை கணம்
ஒவ்வொன்றில் மனதுள்
வைத்தால்
 
சோம்பி நின்ற பாதங்கள்
தாளம் போடும்
சிலையாய் நின்ற
இடையும் தான்
தனி என்று
தீராத நடனமிடும் 
 
மெய் மறந்து 
மெய் முழுக்க 
மின்னல் வேகம் 
மின்னித் துள்ளும்
 
விழிக்க மறந்த 
விழிகளும் 
விளையாடித் துள்ளும்  
 
களைப்பை மட்டும் 
களையாய் தந்த 
முகம் கூட 
மாறும் ஜீவக் 
களையாய் 
 
இயற்கையான மாற்றம் 
தரும்
அவதார புருஷர் 
இயற்கையன்றோ 
 
நம்மில் நம்பாத பலரை
நம்மில் சிலர் நம்ப
வைப்போம்
 
வாழ்க கிருஷ்ணன் லீலை 
வாழ்க கிருஷ்ணன் கீதம்  
 
 
 

Sunday, August 11, 2013

நங்கையர் நலம்

நங்கையர் நலம்

ஒரே ஒரு லக்ஷ்யம் சபரி மாமலா 

ஒரே ஒரு மோஹம்  திவ்ய தரிசனம் 
ஒரே ஒரு மார்க்கம் பதினெட்டாம் படி 
ஒரே ஒரு மந்திரம் சரணம் ஐயப்பா 

ஒருமையோடு கூடி  ஒழுகி வந்தேன் 
ஒரே ஒரு மாதம் 

எதற்காக எனக்கிந்த கருணை?
என் பாவம் தீர்த்த நீ 
பிறர் பாவம் தீர்க்க வை 
இல்லை இந்த கணம் 
எமனிடம் அழைத்துச் செல் 

நான் பார்த்த உண்மை 
பிறர் அறிய செய்ய வேண்டும் 
வெள்ளம் போல் புரண்டு வரும் 
வேங்கை பிரித்தெடுத்து 
அடுக்கித் தர காலம் காணாது 

என் நாவில் வந்து 
நாளொன்று நங்கைஒன்று 
என்று நகரத்து 
இல்லை எனக்கு வேண்டாம் 
இந்த உயிர் 

நங்கையர் நலிந்திருக்க 
நெருக்கத்தில்  நீயிருக்க 

பூஜை நடத்தினர் 
பிரசாதம் மறந்தனர் 
இல்லை மறைத்து வைத்து 
விளையாடி மனம் மகிழ்ந்தாய் 
விளையாட்டை மாற்று 
நீ மாற்றும் வரை நான் 
விளையாட மாட்டேன் 

ஒரு நங்கை நகர்த்தினால் 
ஒரு தரம் விளையாடுவேன் 
இனி உன் இஷ்டம் செய்வதை செய் 
மன்னித்து விடு , மன்னித்து விடு
என்னை.

Sunday, June 30, 2013

ஐய்யப்பன் கீதம்

பாலம் அமைத்திட்டேன்
ஏழு கடல் மேல்
இறைவனை கைபிடிக்க

பிடித்த மறு கணம்
பறந்தது
பாவம் பொடிபட்டு

பதினெட்டுப் படி ஏறி
ஐயப்பன் கைபிடிக்க
ஏங்கினேன்

ஐயப்பன் கருணை
எனக்கென்று தனி
பதினெட்டுப் படி

எனக்குள் ஐய்யப்பன்
என்றெண்டும்
இருந்திட்டபோதும்

உயிரை கல்லாக்கி
கல்லை உயிராக்கி
காணும் வல்லவன்

தானென்று இன்றுதான்
உரைத்திட்டான். அவனாகி
நானும் கல்லை கனியாக்கப்
புறப்பட்டேன்

வாழும் ஐய்யப்பன் கீதம்
வளரும் ஐய்யப்பன் லீலை
வாழ்க வையகம்
 

Saturday, March 9, 2013

இறைவன்


சோர்வுற்ற நெஞ்சம்
அவனிடம் தஞ்சம்

அவனுள் கலந்த நெஞ்சம்
பிறரை மிஞ்சும்

அவனை அறியா நெஞ்சம்
துயரில் துஞ்சும்

அவன் காலடியில் தஞ்சம்
விருத்திக்கு இல்லை பஞ்சம்

அவனைப் புகழ்ந்த நெஞ்சம்
சான்றோரை மிஞ்சும்

தஞ்சம் அடைந்தோனை
தூக்கி விடும்
அவன் நெஞ்சம்
இறைவன் நெஞ்சம்