Sunday, December 30, 2012

அனுபவம் தரும் சுகம்

அனுபவம் அதனை
வடிவமைத்து
தெளிவுபடுத்தி
புதுமை சேர்த்து
பலருக்கு
பலவிதம்
புகட்டி வந்தால்
அதுவும்
புது வித
அனுபவம்
ஆகுமே

அனுபவமிக்க
மனங்கள்
இளைய
மனங்களுக்கு
நல்ல
தூணாய்
அமையும்
காலம்
வசந்த காலம்

சூத்திரம்
தேவையானவர்க்கு
சுறுசுறுப்பாய்
அள்ளிக்
கொடு

வாழ்வு
என்றும்
சுகம்
ஆகுமே 

Tuesday, November 13, 2012

குழந்தையை வையாதே பாப்பா

குழந்தையை வையாதே பாப்பா
அன்று சொன்ன பாரதி
இன்றெனக்கு  தூது விட்டான்!

பத்தும் பதினெட்டும் குழந்தை தான்
அறியாமல் குழந்தையை
வாட்டும் நம்முள் பலர்

சரஸ்வதித் தாயை நற்சொல்
வேண்டியே வேண்டி நின்றேன்
தாயும் தந்தாள் புகழும் பழக்கமதை

குழந்தையைப் புகழ்வீர்
புகழ்வடைவீர்!

Tuesday, November 6, 2012

உங்களுக்கான நூல் : மேம்பாட்டுக் கவிதைகள்


முன்னுரை

என்னுடைய இந்த நூலை விரும்பி படிப்பதற்கு என்னுடைய வந்தனங்கள். நன்றியும் கூட. இந்த நூலைப் படிக்க வந்ததினாலேயே நீங்கள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு நல்ல பாதை அமைத்து விட்டீர்கள். முன்னேற வேண்டும் என்ற  நோக்கத்துடன் தேடலை ஆரம்பித்து விட்டீர்கள்  என்றாலே
பாதி முன்னேற்றம் அடைந்து விட்டீர்கள்.

 
நாம் துன்பம் என நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் இருக்கும் இடம் இல்லாமல் போய் விடும் நாம் மட்டும் சரியான நேர்மறையான   கண்ணோட்டத்தில் இருந்தால்.

பெரும்பாலும் மனக் கலக்கத்தால் நம் திறமைகளை நாம் அறிவதில்லை. நம்முள் பெரும் சக்தி அடங்கி உள்ளது. நாம் அதைப் புரிந்து கொள்ளாமல் பல சமயங்களில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுத்து நம் முழுத் திறமை வெளிப்படா  வண்ணம் வாழ்ந்து வருகிறோம்.

பலவீனமான எண்ணங்களுக்கு விடை கொடுத்து மாறாக தியானம், தெய்வ நம்பிக்கை, நற்சிந்தனை இவற்றின் உதவியோடு, நம் முன்னேற்றத்தை  சிறைப்படுத்தும் சில கெடுதல் தரும் பழக்கங்களை விட்டு விட்டால் நாம் வாழ்வில் விரைவில் முன்னேறி விடலாம்.

டிவி, போன் இவை நம்மை ஆள அனுமதி தந்திருப்பது போலவே கூடவே அன்பு, தியாகம், தாயன்பு, கருணை, மறுமலர்ச்சிக்கான சிந்தனை இவற்றிற்கும் நம்மை ஆள  அனுமதி தர வேண்டும் என்பது உங்களுக்கான என்னுடைய பணிவன்பான வேண்டுகோள்.


அன்பு, கருணை என்று மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எவ்வளவு பலம் வாய்ந்தது என்று உங்களுக்கு விளக்கிட சில எளிய கவிதைகளை உங்களுக்குத் தந்து இருக்கிறேன்என் அனுபவத்தில் உருவான கவிதைத் தொகுப்பாக இருந்தாலும், உங்களுடைய வாழ்க்கைக்கும் இவை பொருந்தும்.

இக் கவிதை தொகுப்பின் சாரம் ஒரு வரியில் சொல்லப் போனால் எவரிடத்தும், எவ்விடத்தும் நல்லதை மட்டும் கண்டு, மனதில் தக்க வைத்துக் கொண்டு பிறவற்றை தள்ளி விட வேண்டும் என்பது தான்.

ஒவ்வொரு கவிதையைப் படித்த பின்பு, உங்கள் மனதில் அதன் தாக்கம் என்ன என்பதை சிறிது நேரம் கண்காணித்து அதன்படி வாழ்ந்து, முன்னேற்றமடைந்து பிறர் முன்னேற்றம் குறித்தும் பாடுபட வாழ்த்துகிறேன்