Saturday, December 25, 2010

இறைவன் ஒளித்துக் கொண்டான்

ஆருயிர்ப் பள்ளித் தோழனே
ஸ்ரீரங்கத்தில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உன் மேல் வைக்கும் கசிவான காதலாயிற்றோ?

அலுவலகத் தோழரே
தஞ்சை பெரிய கோவிலில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உங்கள் மேல் வைக்கும் கசிவான காதலாயிற்றோ?

அன்புக் கணவனே
பழனியில் அன்று நான் பெற்ற அருள்
இன்று உன் மேல் வைக்கும் பக்தி ஆயிற்றோ?

அன்பு மனமே
சமயபுரத்தில் அன்று நான் பெற்ற அருள்
இன்று பலமாக நீ இருக்க காரணமோ?

அன்பார்ந்த தோழி மற்றும் தோழர்களே
கோவிலில் பெற்ற அருளை
நம்மை செப்பனிடும் கருவியாக
மாற்றிக் கொண்டால் குறைந்து போகுமா?

எங்கள் வீட்டு பூஜை அறை முருகன்
வைத்தான் பலப் பரீட்சை ஒன்று
பலமெல்லாம் முழுவதுமாய் தொலைக்க விட்டு
மீண்டும் திருப்பித் தந்தான் அவனே

உமக்கும் பலம் குறையும் போது இறைவன்
எடுத்து ஒளித்துக் கொண்டான் என்றே
ஏன் நினைக்கக் கூடாது?

எல்லாம் அவன் அருளே
எல்லாம் அவன் அருளே

1 comment:

தினேஷ்குமார் said...

தமக்குள்ளே மறைந்திருக்கான் அகக்கண்ணாய் மலர்ந்திருக்கான்
புறம் தேடி பயனில்லை
அகம் நோக்கி அங்குணர்
அவனிருக்கும் இடமதுவே ........