திருமணம் என்ற பந்தத்தில்
தெரிந்து கொண்டது முற்களும்
கற்களும் மட்டுமல்ல
பூக்களும் பழங்களும் கூட
அறிவு பூர்வமாக மட்டுமே
சிந்திப்பது குடும்ப நன்மைக்கு
ஆபத்தாகவே முடியும் என்பதும்
விஷயங்களை அன்பின் அடிப்படையிலும்
மனித உறவின் அடிப்படையிலும்
கையாள வேண்டும் என்பதும்
குடும்பத்தினரிடம் உள்ள நல்ல அம்சங்களை
மட்டுமே மனத்தால் காண வேண்டுமென்பதும்
கல கல வென்று சிரிப்பொலி கேட்க வேண்டிய இடத்தில்
கவலையும் கோபமும் மிகுந்தால் உலகின் மீதுள்ள
நம் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும்
பல பத்து வருடங்கள் சென்ற பின் வரும் ஞானோதயம்
சில பத்து மாதங்களில் வராதிருக்க காரணம்
எது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்
Friday, December 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கவிதைகள் நன்றாக இருக்கிறது.... வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறது...
உங்களைப் போன்று ஆதரவும் ஊக்கமும் அளித்தால்
நான் கவிதைகளைத் தொடருவதில் தடங்கல் இருக்காது
நன்றி
வாழ்க்கை உணர்ந்து எழுதிய வரிகள் கவிதை சிறப்பு . பகிர்வுக்கு நன்றி
Post a Comment