Sunday, December 12, 2010

ஆசிரியர் இலக்கணங்கள்

வேட்டியும் அணிந்து வந்தனர்
காண்போமோ இன்று?

ஒரு சில நாளில் பாட்டும் பாடினர்
பாடுவரோ இன்று?

குசேலர் கதையும் கூறினர்
கூறுவரோ இன்று?

ஸ்கேலில் அடித்தும் இருக்கின்றனர்
அடிப்பாரோ இன்று (அமெரிக்காவில்)

சாக்பீஸ் மட்டுமே கண்டனர்
கம்ப்யூட்டர் கண்டனரோ அன்று?

வகுப்பில் நிசப்தம் அமைத்தனர்
பேக்ரௌந்து நாய்ஸ் கண்டனரோ அன்று?

வீட்டு உணவேக் கொண்டனர்
காண்டீன் கண்டனரோ அன்று

காலமும் மாறியது
இவர்களும் மாறினர்

மாறாதது ஒன்று உண்டன்றோ?
அது தான் மலரும் நினைவுகள்

அந்த நாள் ஆசிரியரின்
இலக்கணங்கள்

2 comments:

Mohan said...

ஹாய் மீனா,
நீ உன்னை தமிழ் கவியாய் அடையாளம் காட்டுகிறாய்.
இது உந்தன் தமிழ் பற்று மட்டுமன்றி நீ யாராக இருக்க விரும்புகிறாய் என்பதயும் மற்றும் நிறை குடம் தளும்பாது என்பதை நிரூபிக்கறது.
நான் பலமுறை யோசித்திருக்கிறேன் .ஏன் நம்மில் சிலர் தன்னுடன் தன படிப்பு அல்லது தன் தொழிலை சேர்த்து எழுதுகிறர்கள் ?
உன் கவிதை நன்றாக உள்ளது.
மேலும் எழுதுவதற்கு என்னுடைய ஊக்கங்கள்.
நம்முடைய நண்பர்கள் ப்ளாக்இல் எழுத என்னுடைய வேண்டுகோள்.
உனக்கு மறந்து போயிருக்கலாம்.நான் மோகன் , 5 முதல் ௦ ௦ 10 வரை படித்த நண்பர்களில் ஒருவன்.
http://bphss1980classmates.blogspot.com/
நன்றி

மோகன்

Meena said...

நன்றி மோகன். வாசகர் தரும் ஊக்கத்திலயே
நல்லக் கவியும் மலர்கிறது. நான்
கவி உலகில் புதிதாய் மலர்ந்துள்ள மலரே