Tuesday, December 21, 2010

கொஞ்சம் பொய் உள்ளது

பிறந்த பொழுது
உடலைக் கொடுத்த
உயிரே

இறப்பதற்கு முன்
உடலைக் காதலிக்கக்
கற்றுக் கொடுத்து விடு

உலகில் உள்ள
அனைத்தையும்
காதலித்து விட்டேன்
உன்னைத் தவிர

கொஞ்சம்
பொய் உள்ளது
நான் சொல்வதில்

சொல்வதில்
உள்ள மெயமையிடம்
ஒவ்வொரு கணமும்
நான் தஞ்சம்

1 comment:

Anonymous said...

//
உலகில் உள்ள
அனைத்தையும்
காதலித்து விட்டேன்
உன்னைத் தவிர//

நம்மில் பெரும்பாலோர் செய்யதவறுவதில் இதுவும் ஒன்று..