Tuesday, December 28, 2010

வாராயோ விளையாட

அன்பை உடலோடு உடலாக
அணைத்துக் கொண்டேன்

அன்பு கேட்டது என்னை நீ
அதிகம் நேசிக்கின்றாயே ஏன்?

பாலைவனத்தை நொடியில்
பசுஞ்சோலை ஆக்குகிறாயே
அதனால்

பணத்திற்காக என்னை விட்டுக் கொடுப்பாயா
அன்பு கேட்டது என்னை

பணமே எனக்கு உன்னை வெளிப்படுத்தத் தான்
உனக்குத் தடையான பணத்தை விட்டு விலகவும்
தயங்கேன் நான்

என்னை கௌவரிக்க கண்களில் கவி பேசணும்
என அறிந்தீரா
அன்பு கேட்டது என்னை

நீ என்னிடம் உறைந்து மட்டும்
கிடக்கின்றாயே ஆழமாக
கண் பேசும் விளையாட்டுக்கு
வர மாட்டேன் என்கிறாயே
பல சமயம்
உன்னைக் கோபித்து பலன் ஏதும் இல்லை எனக்கு
இருந்தும்
உன்னைக் கோபித்துக் கொள்ளத்தான் போகிறேன்
விளையாட வர வில்லை என்று

3 comments:

ம.தி.சுதா said...

////நீ என்னிடம் உறைந்து மட்டும்
கிடக்கின்றாயே ஆழமாக////

அதை விட வரிகள் ஆழம்.. அருமையாக உள்ளது...

keerthanav@gmail.com said...

உங்கள் கவிதை படிப்பவர் மனதிலும் ஆழமாக உறைந்து கிடக்கும் அன்பை நினைக்கச் சொல்கிறது சகோதரி.

தமிழ்க்காதலன் said...

அன்பையே விதைக்கிறேன்...
அன்பே முளைக்கிறது....
மனிதரல்லாத....
மற்றெல்லாவற்றிலும்....

பிரபஞ்ச படைப்பின்
விதிவிலக்குகள்....
நேசம் புரிய
நெடுங்காலம் ஆகுமோ...?