Tuesday, December 28, 2010

சுற்றியிருக்கும் ஆடவருக்கு

மௌன மாலையை அணிந்தபோதும்
என் மீது உனக்கு ஏன் கவனம்?

கண்ணுக்குள் சிந்தாத பார்வைக்காக
ஏங்கிக் கிடக்கவும் தெரியுமா உனக்கு

மௌனத்திலிருந்து விலகிய கணங்கள்
ஒன்று இரண்டு ஆயினும்
அதனில் ஓராயிரம்
அர்த்தங்கள்
புரிந்து கொண்ட
நீ

என் மௌனம்
கலைக்க முயற்சிக்கிறாய்

சிந்தாதப் பார்வையின் மத்தியில்
சிந்திய ஒரிருப் பார்வையை
பாவையென புரிந்து கொண்ட நீ

என் பார்வையை
மாற்ற முயற்சிக்கிறாய்

என்னை மேலும்
அழகு படுத்த நினைக்கிறாய்

உனக்கு மௌனமாய்
என் வந்தனம்
நீ இருக்கும் இடம்
நாளும் எனக்கு நந்தவனம்

3 comments:

ஆனந்தி.. said...

நல்லா இருக்குங்க..

தமிழ்க்காதலன் said...

இதுக்கான பதில் எனது வலைப்பூ எங்கும் இரைந்து கிடக்கிறது..... இருப்பினும் ஓரிரு வார்த்தைகள்...

மனதின் கதவடைத்த காலம் கண்களை மட்டும் ஏனோ மறந்து போனது...? இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்கிற உணர்வலைகளை எல்லாக் காலமும் கட்ட முடியாமல் சிதறும்போதெல்லாம் கதறும் வலி காற்றில் பரவுவதை தடுக்க முடியாமல் தவிக்கும் நினைவுகளில்..... நிழலாய் சிரிக்கும் விதியின் கொடுமை...

Meena said...

கண்களை இழந்து கண்களை மீண்டும் பெரும் நாள் ஆனந்தத் திருநாள். அது போலவே மௌனம் கலையும் நாள்
எப்படிப்பட்ட விதியையும் சாந்தமாக ஏற்றுக் கொள்ளும் முதிர்ந்த உள்ளத்தை நாடிச் செல்வோம் நாம்