இளவரசன் என்ற பெயர் உனக்கு
அணையா விளக்கு நீ எனக்கு
காலை எழுந்ததும் நீ முதலில் பார்த்தது
என்னை நான் முதலில் பார்த்தது உன்னை
நான் கோலம் போடுவதற்கு முன்
நல்ல குதியாட்டம் போட்டாய்
என்னைப் பார்த்து
உனக்கு உணவிடும் பாக்கியம்
கிடைத்த அன்று என்னைக் கீறி விட்டாய்
பசியில் அன்று
கீறிய காயம் மறைந்து விட்டதே என்று
ஏக்கம் அடைகிறேன் நானும் இன்று
நீ அழுது கொண்டே
பேதி எடுத்த நாளன்று
புரியவில்லை எனக்கு ஏன் என்று
நல்ல வேளை நீ விரைவில்
குணம் அடைந்தாய்
உனக்கும் வந்த அதே
நோய் தான் எனக்கும் வந்தது
உன்னைக் கொன்று விட்டனர்
என்னை விட்டு வைத்தனர்
இறைவன் உனக்கு ஆறறிவு
படைக்காமல் விட்டதனாலே
விரைவில் உலகை விட்டுச்
சென்று விட்டாய்
ஆறறிவு படைத்த எனக்கு நீ ஏழாம்
அறிவொன்று புகட்டி விட்டாய்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்பு மீனா, வணக்கம். என் கவிதைக்கான உங்களின் கருத்து படித்து விட்டு நிறைய யோசித்தேன்..... என்பதை விட யோசிக்க வைத்தீர்கள் என்பதே பொருந்தும். உங்களின் சில வரிகள் பல வலிகள் பேசுகின்றன. நிறைய யோசிக்கிறேன்..... இன்னும் நிறையாமலே.....
உங்களிடம் நிறைய விசயங்கள் கலந்துரையாட வேண்டும் எனத் தோன்றுகிறது. உங்களின் இந்தப் பக்க அனைத்து கவிதையும் படித்து விட்டுதான் இங்கு என் கருத்துரை இடுகிறேன். உங்களின் நான்கு வலைப்பூவையும் ஒரு முறை பார்வை இட்டேன். அது பற்றி என் கருத்துக்கள் விரைவில் உங்களை வந்தடையும்.
இறையின் வழிகாட்டுதல் மிகச் சரியான இடத்தில் உங்களை சந்திக்க வைத்திருக்கிறது என்றே கருதுகிறேன். உங்களின் புனித பயணம், நோக்கம், சேவை வெற்றியடைய வாழ்த்துக்கள்.
விரைவில் சில வினாக்களுடன் சந்திக்கிறேன்.
கருத்துரைகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த
என்னை ஆயிரம் கருத்துரைக்கான
ஒன்றான மகிழ்ச்சியை ஒரே கருத்துரையில்
தந்து விட்டீரே. என்னை நீங்கள் நன்றாகப்
புரிந்து கொண்டு விட்டீர்கள் என்பதே என் மகிழ்ச்சிக்குக் காரணம். நான் சரியான பாதையில் தான் செல்லுகிறேன் என்று மற்றவர் உத்தரவாதம் அளிக்க வேண்டிக்கொண்டுதான் இருக்கிறேன் அவ்வளவு குழம்பி இருக்கிறேன் வாழ்வில். நிகழ காலம் சிறப்பாய் இருப்பதை நான் உணர்கிறேன். உங்களைப் போன்ற அன்புள்ளங்கள் என்னை மீண்டும் புனிதப் பாதையில் செல்ல
வழி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்துள்ளது
Post a Comment