பச்சை சிகப்பு கலரை முதன் முதலில்
கற்றுக் கொண்ட அந்த கலர் பட
புத்தகம் இன்று நினைவிற்கு வருகிறது
முதல் வகுப்பில் என்று நினைக்கிறேன்
மனக் கணக்குகளில் பெயர் போன
நான் வாய்பாடுகளையும் சுலபமாக
சரியாகக் கற்றுக் கொண்டதில் அதிசயம்
ஒன்றும் இல்லை
தமிழில் ஒப்பித்தல் போட்டியில்
வருடா வருடம்
பரிசு பெற்றதனால் தான்
இன்று கவி எழுத எனக்கு
விருப்பமோ?
ஆங்கிலம், கணிதம் இவற்றை
தந்தை சொல்லிக் கொடுத்த விதமே
தனி
முதல் ரான்க் எடுத்ததற்கு தனி
பாராட்டுக்கள். வேகமாகப்
புரிந்து கொண்டதற்கு தனி
பாராட்டுக்கள் தந்தையிடமிருந்து
பரிசுப் புத்தகங்களை
வீட்டில் கொட்டிய
நினைவும் நீங்கவில்லை
பனிரெண்டாம் வகுப்பிலும்
நல்ல மதிப்பெண் எடுத்தாயிற்று
பொறியியல் கல்லூரி முடித்து
நல்ல வேலையிலும் அமர்ந்தாயிற்று
அலுவலகத்தில் பலரைப் போல
துரிதமாக வேலையை
முடிக்க வில்லையே என்ற
ஆதங்கம் மட்டும் விலக வில்லை
கவி எழுத ஒரு மூளை
அலுவலகத்தில் வேலை பார்க்க வேறொரு
மூளையா? இந்த மூளையின் விநோதம்
எனக்குப் பிடிபட வில்லை
நான் சொல்வது உங்களில்
எவருக்காவது பிடிபடுதா
என்று பார்ப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமையா இருக்குங்க ... தொடரட்டும் உங்கள் பயணம் ,....
உங்களின் மின் அஞ்சல் முகவரி கிட்டுமா .... ?
சூப்பர் கவிதையாக தங்கள் வாழ்கையின் வரிகள்
நன்றி மிக்க நன்றி
பழைய நினைவுகளுக்கு சென்றேன்; கவிதை எழுதவே.
நன்றாக பிடிபடுகிறது சகோதரி வாழ்த்துகள்
\\நன்றி மிக்க நன்றி\\
மின்னஞ்சலில் மீட் பண்ணுவோம்
Post a Comment