Friday, December 24, 2010

பாட்டி வீடு

மாடம்
மாடத்தில் தண்ணீர்க் குழாய்
குழாயில் பல நேரம் விளையாட்டு

கூடம்
கூடமதில் மார்கோனி ரேடியோ
ரேடியோவில் சிரிக்க வைக்கும் விளம்பரம் எந்நேரமும்

சமையற் கூடம்
கூடத்தில் பாட்டி
அமர வைத்து ஆக்கித் தந்த ஆப்பமும்
ஆப்ப மணமும்

தாத்தாவின் அலுவலகக் கூடம்
கூடத்தில் ஒரு ஓரம்
சீட்டாட்டக் களம்

அடிக்கடி விருந்து
அடிக்கடி அரட்டை
அடிக்கடி அமர்க்களம்

ராத்திரி நேரம்
தயிர் சாத உருண்டை சாப்பாடு
ஒரு கல் அதிக உப்பு
நாவிற்கு சுவை
பாட்டி கை பட்ட நற் சுவை

இலையில் கால் படி காய்
சில சமயம் அழுகை வருகிறார்போல்
இருக்கும். தட்டுத் தடுமாறி
மிச்ச மீதத்தோடு சாப்பிட்டு முடிக்கலாம்

கிணற்று வாளி இறைக்கும் தண்ணீர்
கடின உழைப்பு
மாமாக்களுக்கு குளியல்
கிணற்ற்றடியில்

குளியலறை
அறைக்குள் இருந்து கூரையைத் துளைத்துச்
சென்ற தென்னை மரம்
வெண்கல அண்டா
அண்டாவில் தக தகவென்று சுடும் நீர் எப்போதும்
பாட்டி வீட்டில் மட்டுமே கிடைத்த ஹமாம் சோப்பு
அறைக்கு வெளியே வரிசையாய் மூன்று தென்னை மரம்
துணி துவைக்கும் கல்
பல் விளக்கும் சிறு சுத்தமான சாக்கடை

தீபாவளிக்கு சிறப்பு பட்டாசுகள்
மாமா கைவசம்
இலவசம்

பொங்கலுக்கு சிறப்பு கரும்பு
விருந்து. பொங்கல் வடை பாயசம்

கல்யாண காலங்களில் கண்ணை அசத்தும்
இனிப்புக்கள் தாம்பாளங்கள்

எந்நேரமும் பழ வாசம்
பூஜை அறையில்

வீட்டுத் திண்ணை
பஸ், கார், என தேர்ந்தெடுத்தல்
வேடிக்கை பார்த்து
யாருக்கு அதிகம் வந்தது
என்று எண்ணுதல்
சூப்பெரான விளையாட்டு

ஆக அம்மாவிற்கும் எனக்கும் போட்டி
யாருக்கு அதிகமாகப் பிடித்தது பாட்டி வீடு என்று

1 comment:

தமிழ்க்காதலன் said...

பாரம்பரிய சுகமும், சுவையும் மணக்கிறது. ஆனால் மனம் கனக்கிறது. இப்போது அப்படி ஒரு சுகத்தை நம் சமூகம் இழந்து விட்டது. நினைவுகள் கூட இனிக்கிற சுகம், மறக்க முடியுமா...? தவிப்பான உணர்வுகளில் இன்னமும் பாட்டி வீடு......