வீட்டைப் பார்த்து
வேலையைப் பார்த்து
குடும்பத்தினரைக்
கோபித்து
என்னம்மா
பிரயோஜனம்?
வாழ்வில்
அன்பும் பண்பும்
நிறைந்திருக்க வழி
சொல்லுகிறேன்
அம்மா தெரிஞ்சிக்கோ
வேலையிலும் சரி
வீட்டிலும் சரி
சுமாராக
ஒளிர்ந்தாலே போதும்
என்று நினைச்சுக்கோ
குற்ற உணர்வு தேவையில்லை
சமுதாய சூழ்நிலை என்று
அறிஞ்சுக்கோ
உனக்கென்று தினம்
தனி நேரம்
ஒதுக்கிக்கோ
தியானம் செய்ய
நேரம் பண்ணிக்கோ
உன்னை நீயே
நன்றாகப் புரிஞ்சுக்கோ
நீ நீயாக இருந்துக்கோ
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
எளிமையான வரிகளில் வாழ்க்கை தத்துவங்களை சொல்லியிருக்கிறீர்கள். நல்லாயிருக்குங்க..
mam, word verification- நீக்கவும். வாசிப்பவர்கள் கருத்துரை வழங்காமல் போக வாய்ப்புள்ளது.
தமிழ்மணம், இன்ட்லியுடன் இணையுங்கள் . உங்களின் நல்ல கவிதைகள் நிறைய பேரை சென்றடையட்டுமே...
இணைத்து விட்டேன். இப்பொழுது அதிகம் பால்லோவேர்ஸ் சார் எனக்கு. நன்றி .
Post a Comment