Tuesday, December 28, 2010

நல்லதை மட்டும் கண்டிருந்தால்

நல் எண்ணங்கள் மட்டுமே கொண்டிருந்தால்
என்னுடன் ஓடிப் பிடித்து விளையாடிய
துன்பங்கள் என்னைத் தொடாமலே ஓடிப்
போயிருக்கும்

நல்லதை மட்டும் கண்டிருந்தால்
என்னை சோர்வடையச் செய்த சோகங்களும்
சோர்ந்து போயிருக்கும்

இருப்பதை மட்டுமே நினைத்திருந்தால்
என்னை வாட்டி வைத்த எண்ணங்களும்
வாடிப் போயிருக்கும்

விடியலுக்கு நேற்றை விட இன்று
ஒன்றும் குறைந்து போக வில்லை
நாமே நமக்கு நல்ல நாட்களாய் விடிவோம்

வாழ்க நல் எண்ணங்கள்
வளர்க நற்சிந்தனை

2 comments:

தமிழ்க்காதலன் said...

சிறப்பான சிந்தனை... ஆயினும் உள்ளூர ஊசலாடும் விரக்தி வலிக்கத்தான் செய்கிறது... ஒரு பிரசவ வலியை உணரமுடிகிறது.

Meena said...

வலியோ வறுமையோ நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றது
திரும்பிப் பார்த்தால் எல்லாம் நல்ல படியே நடந்துள்ளன என்று
நினைக்கும் பக்குவம் வந்து விட்டது . கீதை சாரம் நன்கு
புரிகிறது