தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
மந்திரம் சொன்ன தந்தையின் அருளை
மற்ற நல்லவர் சொல்லில் காணக்
கற்றுக் கொடுத்த கதிர்காமத்துறை
கதிர்வேல் முருகா உன்னைக்
கணக்காய் பாடிட காலையில்
எழுப்பு கோழி கூவும் முன்னே
கந்தர் சஷ்டி கவசமதை வருகின்ற
புத்தாண்டில் புலன்களோடு ஒன்றாய்
புகுத்தி விடு
புகுந்த கவசமதை புனிதமாகப்
புரிந்து கொள்ள புதிதாய்
எனக்குள் புதுமை புகட்டு
புரியாத விஷயம் தனை
புரிய வைத்து உன்
புகழ் காக்க
புனிதப் பயணம்
புறப்பட
புதிதாய் என்னை ஆயத்தமாக்கு
புனித புத்தாண்டாய்
அமைந்திடவே புதிதாய்
என்னை வாழ்த்திடு
உன் பாதம்
தாள் பணிந்தேன்
புனித புத்தாண்டில்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வேதனையாய் சிரிக்க முடியாமல் சிரிக்க மட்டுமே முடிகிறது.... உங்களை இறை காத்தருளட்டும். மனப்பூர்வமாய் பிரார்த்திக்கிறேன்.
நன்றி தமிழ்க் காதலன் அவர்களே
Post a Comment