ஏன் வந்ததோ?
கம்ப்யூட்டர் முன் கட்டாயமாக உட்கார வேண்டிய நிலை
என்ன விளைவு மூளை இடது பக்கமே உபயோகித்து ?
மறந்து விடுகிறது, மறுத்து விடுகிறது கண் மற்றவிரடம் பேச
சிட்டாய்ப் பறக்க வேண்டிய கால்கள் கணம் ஒன்றும்
கட்டப் பட்டு விட்டது கம்ப்யூட்டர் நாற்காலியில்
கால்கள் பல பத்தாண்டுகள் கட்டப் பட்டு விட்டது
சூறையாடி விட்டது சக்திமான் தோற்றத்தையே
விடுபடத் துடிக்கிறேன் இவற்றிலிருந்து
பணியில் நட்புக்கு இடம் கொடுத்து
தேற்றிக் கொள்ளும் என் போல் மானிடர்கள்
எவர் இருப்பினும் கேளுங்கள்
உழைக்கும் கரங்கள் என்று சொல்வதற்கு பதில்
உழைக்கும் மனங்கள் என்றே சொல்லுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கணிப்பொறி துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையோர் விரும்பி அனுபவிக்கும் வேதனைதான் இது.
கடும் குளிரில் தீயின் சுகம் போல... தொட்டுக்கொண்டே இருக்கவும் முடியாது, விட்டுவிடவும் முடியாது...
உணர்வுகள் அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் ஒரு உயிரில்லா ஜீவன் கணிப்பொறி :-)
//உணர்வுகள் அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் ஒரு உயிரில்லா ஜீவன் கணிப்பொறி //
கணிப்பொறி யூடுயூப் பாடலை மறந்து விட்டேன்
நினைவு படுத்தி விட்டீர் . எப்படியும் கணிப்பொறி
வேலை ஒரு வித சிறை வேலை தான்.
//கடும் குளிரில் தீயின் சுகம் போல... தொட்டுக்கொண்டே இருக்கவும் முடியாது, விட்டுவிடவும் முடியாது...//
அருமையாகக் கூறினீர்.
வாழ்வில் பிற விஷயங்களுக்கும்
இவ்வரிகள் பொருந்தும்
பணத்தை தேடி பாசமான உறவுகளை இழக்கும் கணிப்பொறி வல்லுனர்களை பற்றிய உங்கள் சிந்தனை அருமை...
//கால்கள் பல பத்தாண்டுகள் கட்டப் பட்டு விட்டது
சூறையாடி விட்டது சக்திமான் தோற்றத்தையே//
நன்றாக சொன்னிர்கள்...
தொடரட்டும் உங்கள் முத்தான பணி.. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றிங்க!
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
Post a Comment