Sunday, December 19, 2010

நினைவிற்கு எட்டிய நாட்கள்

தவளை மேல் கல் எறிந்தும்
தண்ணீரில் கப்பல் விட்டும்

ஓடிப் பிடித்து விளையாடியும்
ஓனான் விரட்டி அடித்தும்

வண்ணத்துப் பூச்சியைக் கட்டி விட்டும்
வண்டுகள் தேடி அலைந்தும்

மட்டைப் பந்து ஆடியும்
மர்மக் கதை படித்தும்

பட்டமொன்று விட்டுக் கொண்டும்
பள்ளம் தாண்டிப் பழகியும்

வேட்டுகள் வெடித்து ரசித்தும்
வேப்பம் பழம் தின்னு பார்த்தும்

வாதாங்கொட்டை உடைத்தும்
வாத்தியாரை கிண்டல் அடித்தும்

கில்லி ஆடி அளந்தும்
கிரிக்கெட் சிச்சர் அடித்தும்

பேப்பர் ராக்கெட் விட்டும்
பேப்பர் ராக் சிசெர்ஸ் ஆடியும்

நொண்டி நொண்டி பிடித்தும்
நெல்லிக்காய் வேட்டையாடியும்

கூழாங்கல் கூட்டியும்
கூர்காவை குழப்பியும்

கொடுக்காப்பள்ளி பறித்தும்
கொய்யக் காய் கடித்தும்

ஓடிச் சென்ற நாட்கள்
இன்று நினைவிற்கு
எட்டிய நாட்கள்

2 comments:

Paul said...

நன்றாக இருக்குங்க.. குழந்தை பருவ நாட்களுக்கு இழுத்து செல்கின்றன இக்கவிதையிலுள்ள நிறைய வரிகள்..

சுந்தரா said...

ம்ம்...நினைவுக்குமட்டுமே எட்டக்கூடிய நாட்கள், நிஜம்தான்.

கவிதை பின்னாடிபோகவைக்குது :)