Monday, December 20, 2010

அத்வைத பித்துப் பெண்

நான் ஒரு சராசரி
மனுஷி தான்
இருந்தும் என்னுடைய
சிந்தனைகள்
உணர்வுகள்
சற்று
மாறுபட்டனவே

நூற்றுக் கணக்கான
'அவன்கள்' எனக்கு
ஒரு அவனாகவேத்
தோன்றுகின்றனர்

அவளுக்கும் அதே கதி தான்
அதாவது ரமாவாக சீதாவாக
இருப்பது அந்த ஒரு அவள்
தான்

அனைத்து மணமும் ஒரு
மணம் தான்
அனைத்து ஒலியும்
ஒரு ஒலி தான்

எனக்கு சிறுமியாக
செய்யப்பட்ட சகாயமும்
இன்றைய தினம்
செய்யப்பட்ட சகாயமும்
ஒன்று தான்

அண்ணன் எனக்கு செய்த
அநியாயமும் அயலான்
செய்த அநியாயமும்
ஒன்று தான்

அன்னையின் அன்பும்
அடுத்தவன் அன்பும்
ஒன்று தான்

அதனால் நீங்கள்
எனக்கு அத்வைத
பித்துப் பெண் என்று
தாராளமாகப்
பெயர் வைக்கலாம்

5 comments:

Unknown said...

தாங்கள் எழுதிய கவிதைகளிலேயே இது மிக சிறந்த கவிதையாகவே தெரிகிறது.

Unknown said...

//நூற்றுக் கணக்கான
'அவன்கள்' எனக்கு
ஒரு அவனாகவேத்
தோன்றுகின்றனர்//
//அனைத்து மணமும் ஒரு
மணம் தான்
அனைத்து ஒலியும்
ஒரு ஒலி தான்//

இந்த வரிகள் காட்டும் உள்ளுணர்வு மிக அருமை.
மற்ற வரிகளும் கவிதையின் ஓட்டத்திற்கு துணை புரிகின்றன.

Unknown said...

ஆண்மீகப்பார்வையில் இது சரிதான் என்றாலும், சமூகம் உண்மையில் ஒழுங்கற்றுதான் கிடக்கிறது ..

சொல்லாடலுக்கு பாராட்டுக்கள் ...

arasan said...

சிறப்பா இருக்குங்க ... தொடரட்டும் ... வாழ்த்துக்கள்

Meena said...

//இந்த வரிகள் காட்டும் உள்ளுணர்வு மிக அருமை.
மற்ற வரிகளும் கவிதையின் ஓட்டத்திற்கு துணை புரிகின்றன.//
இந்தக் கவிதையை சிறப்பு என்று கூறிய உங்களால் எனக்கு மேலும் எழுத ஊக்கம் கிடைத்துள்ளது. நன்றி