என்னிடம் பிடித்தது என்ன உனக்கு
தவளை கேட்டது
குதிக்கும் பாணி உன்னுடையது
இனம் தெரியாத மகிழ்ச்சியும்
வியப்பும் என்னுடையது
என்னை உன் மனதில் நிறைத்தது என்ன
அடுத்து தவளை கேட்டது
தூங்கிப் போக இன்னும் ஒரு நிமிடமே இருக்க
இயற்கையை ஒலிபரப்பும் உன் சத்தம்
தாலாட்டி தூங்க வைத்தது என்னை
தினமும் என்னை வந்து
என் வீட்டில் பார்க்கின்றாயே
அது எதற்கு தவளை கேட்டது
உன்னிடம் உள்ள ஈர்ப்பு எனக்கு என்
அன்னையிடத்துக் கூட இல்லையே அதனால்
உன் வீட்டிற்கு நான் வந்த போது
அலறி விட்டாயே அது ஏன் கேட்டது தவளை
நீ ரொம்ப மோசம் அனுமதி இல்லாமல்
என் மீது குதித்து விட்டாயே?
நீ மட்டும் என்ன அனுமதி இன்றி
எனக்கு மிக அருகில் கல் எடுத்து வீசி
என்னைத் திகிலடைய செய்து விட்டாயே
நம்ம ரெண்டு பேரும் நண்பர்கள்
இதெல்லாம் சகஜம் என்றே நினைக்கத்
தோணுகிறது. நான் வளர்ந்ததும்
என்னை வந்து பார்ப்பாயா?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அபூர்வ நட்பு!
நல்ல கவிதை!
நன்றாக இருக்கின்றது சகோதரி
நல்லதொரு நட்பு....
மொழிப் பேசும் தவளை அழகுதான். தவளை பேசும் மொழியும் அழகுதான். அட தவளையின் மொழி தமிழ்தான் என்கிற உங்கள் கண்டுபிடிப்பு சிலிர்க்க வைக்கிறது. மென்மையாய் ஒரு அன்பின் இழையோட்டம்........ காலை கதிரொளியாய்...
Post a Comment