வண்ண வண்ண புடவைகள்
விரித்துக் காட்டுவது
கடைக்காரர்.
கடைக்காரர் காட்டுவதோ
வரையறையுள்ள எண்ணிக்கை
வானத்தில் இயற்கை கோலமிடும்
வடிவங்கள் ஆயிரமாயிரம்.
இவற்றுக்கு வரையறை
இல்லை ஆனால் வண்ணம் உண்டு
வண்ணங்கள் நோக்கையிலே
நெஞ்சுக்குள் ஓடுதம்மா சந்தோஷ ஆறு
மூளை எதற்குத்தான்
அத்தனை குதிக்கிறதோ
வண்ணங்களை நோக்கின்
வண்ண வண்ண கலர்ப் பொடி
வித விதமாப் பிறந்த ரங்கோலிக் கோலம்
சிதறும் மத்தாப்பு
சிறுவர் விளையாடும் கோலி
பிறந்த நாள் விழாவை அழகித்த வண்ணக் காகிதம்
நீல நிற கடல்,
செந்நிற வானம்,
மறையும் சூரியன்
பச்சைப் பசேல் என்ற புல்தரை
பலவித வண்ண மலர்கள்
பறக்கும் பட்டாம்பூச்சிகள்
இவை வண்ணங்களின்
வெளிப்பாடுகள்
நெஞ்சத்தை
மகிழ்ச்சிக் கூரைக்கு
ஏற்றிச் செல்லும்
ஏணிப் படிகள்
வண்ணமில்லா உலகம்
இருந்திருந்தால்
நிச்சயம் மூளை
கோபித்துக்
கொண்டிருக்கும்
வண்ணமில்லா உலகம்
இருந்திருந்தால்
நிச்சயம் மூளை
கோபித்துக்
கொண்டிருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//வண்ணமில்லா உலகம்
இருந்திருந்தால்
நிச்சயம் மூளை
கோபித்துக்
கொண்டிருக்கும்//
மீனா,
எண்ணமில்லா மனம் இருந்திருந்தால் நிச்சயம் உலகம் கோபித்திருக்கும்.
உணர்வுக் கவிதை.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//வண்ணமில்லா உலகம்
இருந்திருந்தால்
நிச்சயம் மூளை
கோபித்துக்
கொண்டிருக்கும்//
வாழ்க்கை வண்ண மயமாக இருந்தால் தான் சுவாரஸ்யம்.
உங்க்ளுக்கு வண்ணமயமான புத்தாண்டு வாழ்த்துகள்
Post a Comment