நமக்குள்ளே தான் இறைவன்
ஆட்டி வைக்கும் நாமே தான் இறைவன்- அந்த
துணைவருக்கும் அனைவருக்கும் அவர்க்குள்ளே தான்
இறைவன் , உறையும் தலைவன்
நன்றாய்ப் பார்த்திடுவாய் உனக்குள்
நலமாய் நினைத்திடுவாய் தனக்குள் -நல்ல
நாட்களுக்கும் நேரத்துக்கும் நன்றாய்த் தோண்டிடுவாய்
உன்னை, மகிழ்ந்திடுவாய் உள்ளே
தூய்மையுமே நிரப்பிடுவாய் உனக்குள்
தூய அன்பையுமே பரப்பிடுவாய் அவர்க்குள் -நல்ல
சொற்களுக்கும் கவிகளுக்கும் இடையே வைத்திடுவாய்
உன்னை, மகிழ்ந்திடுவாய் உள்ளே
பண்பையுமே அன்பையுமே நம்பு
கற்றதுமே மற்றதுமே தெம்பு - நம்மைப்
பெற்றவரும் மற்றவரும் மகிழ எழுதிடுவாய்
காவடி சிந்து, ஓரடி நீந்து
அடி அடியாய் அடி வைப்பாய் நீயும்
படிப படியாய் பழகிடுவாய் நாளும் - அந்த
பக்குவமும், தத்துவமும் என்றும்
கற்றிடுவாய் அங்கும், உலகெங்கும்
கற்றவற்றை மற்றவரிடம் சொல்ல
கல்லாததை கேட்டறிந்து கொள்ள - நாளும்
புலன்களையும் கண்களையும் கொண்டு
நடத்திடுவாய் நாடகம் ஒன்று, விரைவாய் இன்று
கற்றுத் தந்த நல்லவரை வணங்கு
நல்லவரின் துணை கூட வணங்கு - பலர்
கூறுவதற்கும் சேருவதற்கும் நல்ல
வழியொன்றை அமைப்பாய் , வழி விடுவாய்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தமக்குள் தேட ஆரம்பித்துவிட்டீர்கள் போல தோழி நன்று
/////கற்றவற்றை மற்றவரிடம் சொல்ல
கல்லாததை கேட்டறிந்து கொள்ள - நாளும்
புலன்களையும் கண்களையும் கொண்டு
நடத்திடுவாய் நாடகம் ஒன்று, விரைவாய் இன்று
///////
உண்மை நிலையை அழகாக சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி தோழி
Post a Comment