Friday, December 31, 2010

கோமாளித்தனம்

கோமாளிகள் சர்கசிற்கு மட்டும் அல்ல
நல்ல ஒரு குடும்பத்திற்கும் தான்

சின்னஞ் சிறு சிறுவர்களாய் நாம்
அறிந்திருந்தோம் கோமாளித்தனம்

சோகத்தில் தள்ளாடும் தாயையும்
சிரிக்க வைப்பாய்
நீ தற்காலிக கோமாளி ஆகி

மனம் எவ்வளவு இறுகி இருந்தாலும்
இறகு போல் லேசாகி விட
செய்திடுவாய் கோமாளித்தனம்

சிரிப்பு நடிகர்களுக்கு மட்டுமா கோமாளித்தனம்?
அப்படியென்றால் நாமும் சிரிப்பு நடிகர்கள்
ஆகலாமே

1 comment:

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

நல்லா இருக்கிறது இந்த “தற்காலிக கோமாளிகள்” விளக்கம்...

உண்மையில் நாம் அனைவரும் வாழ்க்கையின் ஏதாவதொரு தருணத்தில் யாரையாவது கண்டிப்பாக சிரிக்க வைக்க முயற்சித்து இருப்போம், ”தற்காலிக கோமாளி”யாகி...

சூப்பர் பதிவு....