Thursday, December 16, 2010

மலைக்கோட்டை

திருச்சி மாநகரின் மையத்தில்
பிள்ளையாரின் பேரருள் பரவும் கோலத்தில்
மெய்மறந்து தரிசிக்கும் நேரத்தில்

நான் வாங்கித் தந்த பூவை
பிள்ளையாருக்கு சாற்றும் நேரத்தில்

பால் அபிஷேகம் காணும் நேரத்தில்
சூடம் காட்டும் தருணத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

பின்னர் சிதறு தேங்காய்
உடைந்த சத்தத்தில்

சிதைந்த சில்லுகளைப்
பொறுக்கும் வேகத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

யானைப் பாதை தன்னில்
விரையும் நேரத்தில்

பின்னர் செங்குத்துப் படியில்
அடியெடுத்து ஏறும் தருணத்தில்

உச்சிப் பிள்ளையார் தரிசிக்கும்
நேரத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

இறங்கி வந்து காவிரி ஆறு
நோக்கும் நேரத்தில்

திருச்சி மாநகரை ஒருசேரக்
காணும் நேரத்தில்

பிரசாதம் சாப்பிட்டு பாறையில்
விளையாடும் தருணத்தில்

மனம் சென்றிடுமே பக்தருக்கே
உரித்தான கோலத்தில்

மலைக்கோட்டைப் பிள்ளையார் இன்று
எனக்கு திருச்சியில் மட்டும் இல்லை

மலைக்கோட்டைப் பிள்ளையார் இன்று
எனக்குத் திருச்சியில் மட்டும் இல்லை

என்றும் எப்பொழுதும்
உறைகின்றார் நெஞ்சினில்

1 comment:

arasan said...

அடிச்சி தூள் கெளப்பிட்டிங்க...
நானும் திருச்சி ல இருக்கும் போது அடிக்கடி போயிருக்கேன்...
பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு அப்புறம் எங்க வேலைய பாக்க போய்டுவோம் நண்பர்களுடன்...

எதையும் வித்தியாசமாக பார்க்கும் உங்கள் எண்ணத்திற்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..