உன் கண்
காந்தமெனக் கவர்ந்திழுப்பது
என் கண்ணை மட்டுமல்ல
முழுவதுமாக என்னை
வாய் தான் பாட்டுக்கு
ஏதோ பேசியிருக்க
கண்ணும் கூடவே
கணக்காய்ப் பேசுதே
கண் எத்தனை எத்தனை
வடிவம் எடுக்குது
நிமிடத்தில் உள்ள
ஒவ்வொரு வினாடியும்
பாவையர் கண்ணிற்கும்
வாலிபர் கண்ணிற்கும்
வித்தியாசம் இருக்க
கண் விழி கலந்த படி
பேசும் மொழி ஒன்று
காதல் மொழி
பேசும் தளம் இரண்டு
என்று எவன் சொன்னது
பேசும் தளமும் இரு இதயம் அல்ல
ஒன்றாய்க் கலந்த ஒரு கூட்டு இதயம்
அடித்துச் சொல்வேன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இயற்கையின் இரகசியம் கசியும் கவிதை. மூலங்களை தொட்டு மூளையை தழுவும் இதம். கண்களின் மொழியில் உலகம் ஒரு தூசு.
Post a Comment