பத்து மாதம் சுமந்து
பல சவால்களுடன்
பிரசவித்து
பச்சைக் குழந்தைக்குப் பாலூட்டி
பல சௌகரியங்களை பணயமாக்கி
பாலும் பழமும்
நாளுக்குப் பல முறை
நாவிற் சுவைக்க வைத்து
பாலகனை வளர்த்தெடுத்து
கட்டிய அந்தக் கூட்டில்
வினையும் விதியும் ஒன்றாகி
பாலகன் இறைவனிடம்
செல்கின்றான்
பெற்றவளோ
கூட்டை கலைத்திட்டாய்
எனக் கேட்டு உருகுகிறாள்
என் உயிரைப் பறித்த பின்பும்
எதற்காக எதனையும்
கொண்டாட வேணும்
மைந்தனின் குரலும் இல்லை
கும்மாளமும் இல்லை
எனக்கு இனி என் குரல்
வேண்டாம் என மௌனக்குரல்
எழுப்பினாள்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
கவிதைக்கு காதல் அவரிகளை விட அம்மா என்ற ஒரு சொல்லே பெரும் அழகல்லவா... எனக்காக இந்த அம்மா பாடவை கேளுங்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.
கேட்டேன், நெஞ்சைத் தொட்டது. எல்லோரும் இந்த ராகத்தில் தான் பாடுவோம் என்று நினைக்கிறேன்
அற்புதம் மீனா...உருகி எழுதி இருக்கீங்க...
உள்ளத்தின் ஊமைக் காயங்கள் காலத்தின் கன்னத்தில் அறையும் கைவரிகள்.... வலிக்க வலிக்க படித்து முடிக்கும் முன் கண்ணில் முட்டி நிற்கும் குளம் கண்ணீராய் கொட்டித் தீர்க்க முடியாமல் மதகுடைத்த குளமாய்...
விதியின் முன்னால் எல்லோரும் சருகுகளாய்.... காலமோ கையில் தீவெட்டியுடன்....
உணர்ச்சிமிக்க வரிகள் ....
நல்லா தீட்டி இருக்கீங்க
//உள்ளத்தின் ஊமைக் காயங்கள் காலத்தின் கன்னத்தில் அறையும் கைவரிகள்.... வலிக்க வலிக்க படித்து முடிக்கும் முன் கண்ணில் முட்டி நிற்கும் குளம் கண்ணீராய் கொட்டித் தீர்க்க முடியாமல் மதகுடைத்த குளமாய்...
விதியின் முன்னால் எல்லோரும் சருகுகளாய்.... காலமோ கையில் தீவெட்டியுடன்....//
தமிழ்க் காதலன் அவர்கள்
வருகைக்கும் உங்கள் பொன்னான கருத்துரைக்கும் நன்றி
Post a Comment