அடுத்த வீட்டுப் பொடியன்களுடன்
விளையாடிய கண்ணாமூச்சி
இந்த காலத்தில் ஏனுங்க
காணாமபோச்சு
கண்ணை மூடிக்கொண்டு தொட்ட
அந்த பால்ய வயதுத் தோழனின்
நட்பு ஆழமாக நெஞ்சில் பதிஞ்சு போச்சு
பதிஞ்சு போன நட்பை மீண்டும்
பயிராய் வளர்த்திடவே
முகவரி கிடைச்சு போச்சு
இனி என்ன அன்பும் பாசமும்
அள்ளிக் கொடுத்திட்டாப் போச்சு
முப்பதில் விளையாடினேன்
கண்ணாமூச்சி மூன்றாய் பதிமூன்றாய்
மனதுமாச்சு
நாற்பதில் விளையாடினேன்
கண்ணாமூச்சி நான்காய் பதினான்காய்
மனதுமாச்சு
கண்ணாமூச்சி விளையாட
வயசில்லையப்பா
விளையாண்டு பார்த்தா
வயசும் பின்னே ஓடிடுமப்பா
வாருங்கள் விளையாடுவோம்
கண்ணாமூச்சி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கம்ப்யூட்டர் கேம் என்றால் சிங்கிளா உட்கார்ந்து விளையாடலாம்.
கண்ணாமூச்சிக்கு அட்லீஸ்ட் ஒருத்தராவது கூட விளையாட கிடைக்கனுமே. நீங்க இப்பவும் விளையாடினா அதிர்ஷ்டசாலி தான்.
குழந்தைகளை பார்க் கூட்டிப் போனா பந்து கொண்டு விளையாடுகிறார்களே தவிர, ஒடிப் பிடித்துக் கூட விளையாட அவர்கள் விரும்ப மாட்டென் என்கிறார்கள்.
சின்ன வயதில் ”பந்து” என்ற விஷயமே எங்களுக்கு எல்லாம் ஆடம்பரம் என்பதால் நிறைய எளிமையான விளையாட்டுகள் இருந்தது.
ஹ்ம்ம்.. வரிகள் பின்னுக்கு இழுத்து செல்கின்றன..
//கண்ணாமூச்சி விளையாட
வயசில்லையப்பா
விளையாண்டு பார்த்தா
வயசும் பின்னே ஓடிடுமப்பா //
வயசு ஓடிடும் ;மனசும் ஓடிடும் ஆனால் உடம்பு ஓடாதே!
அருமைங்க ... அசத்தலா இருக்கு
Post a Comment