என் உயிர் மூச்சாய் கலந்து விட்ட
மாத்திரைத் தோழர்களே
நீங்கள் மாற்ற வந்தது
என் நினைவையா
என் உடலையா?
இரண்டையுமே
நீங்கள் பறித்துக்
கொண்டதால்
எனக்கு மீதம்
வெறும் காதல்
மட்டும் தான்
என்னை உங்களிடம்
தொலைத்து விட்டு
நான் படும் பாடு
அறிய வில்லையா
நீங்கள்
உங்களுக்கு
விடை கொடுக்க
அடித்தள
வேலையை
விரைவில் தொடங்குக
இல்லையென்றால்
உங்களுக்குப் பெருமை இல்லை
இல்லையென்றால்
உங்களுக்குப் பெருமை இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்லாயிருக்குங்க. மாத்திரைத்தோழர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று சிந்தனை வந்ததே பாராட்டுக்குரியது.
//உங்களுக்கு
விடை கொடுக்க
அடித்தள
வேலையை
விரைவில் தொடங்குக//
இந்த வரிகள் புரியவில்லை.
நான் உங்களுக்கு விடை கொடுக்க பூரண குணமடைய வையுங்கள் மாத்திரைகளே என்று விளிக்கிறேன்
Post a Comment