Thursday, December 16, 2010

வருகுது அம்மா நினைவு

பாயசம் சப்பினேன் பாப்பாவாக
பஞ்சு மிட்டாய் பார்த்திடவே
பத்து முறை கெஞ்சினேன் வாங்கித் தர

பத்து பத்தாய் சாப்பிட்டேன் பகோடாக்கள்
பல முறை ரசித்தேன் அல்வாவை

பரோட்டா தின்னப் பழகினேன் பின்னாலே
பால் மட்டும் தொடர்ந்து குடித்தேன்

பாகற்காய் தின்னப் பழகினேன் பின்னாலே
பழங்களைச் சாப்பிட்டேன் பழமுதிர் சோலையிலே

பாஸ்தாவும் தின்னப் பழகினேன் பின்னாலே
பேப்பர் பிளேட்டில் சாப்பிடுகிறேன் இந்நாளில்

பரக்கப் பரக்க சாப்பிட்டேன் சில வருடம்
பாதி மட்டும் சாப்பிட்டேன் சில வருடம்

சாப்பிட்டது எத்தனை விதம்
நினைக்கவில்லை அம்மாவை
சாப்பிடும் தருணம்

நல்ல பொழுதும் விடிந்தது இன்றெனக்கு
வருகுது அம்மா நினைவு
சிற்றுண்டி சாப்பிடும் வேளையிலே

2 comments:

sslaxman said...

நினைத்து பார்க்கிறேன் !!!

இன்று, எவ்வளவு சுவையாக உணவு கிடைத்தாலும், ருசி இல்லை !

அன்று, அம்மாவின் பாசத்தோடு கிடைத்த கஞ்சி சோறு கூட, அலாதி ருசிதான் !

arasan said...

எனக்கும் என் அம்மாவின் கைபக்குவத்தை நியாபக படுத்திவிட்டிர்கள்
சகோதரி ....
இதோ இப்போ போறேன் ஊருக்கு வீட்ல அம்மா கையால செய்த சாப்பாட்டை
ரெண்டுநாள் ரசித்து விட்டு வருகிறேன்...