Saturday, June 18, 2011

அவன்

அவன் பார்வையில் ஓராயிரம்
கவிதைகள் எழுதினேன் காற்றில் நானே

அவன் உருவத்தில் ஓராயிரம் முறை
துள்ளினேன் நானே

அவன் உள்ளத்தில் ஓராயிரம் முறை
குடி புகுந்தேன் நானே

அவன் அன்பில் சர்க்கரையாய்
கரைந்தேன் நானே

அவனைச் சார்ந்து சார்ந்து வாழும் கணமெல்லாம்
பொன் என்று உரைத்தேன் நானே

6 comments:

arasan said...

நீண்ட நாட்கள் பிறகு நல்லதொரு கவிதை...
வாழ்த்துக்கள் மேடம் ...

தினேஷ்குமார் said...

நல்ல கவிதை ...

சி.பி.செந்தில்குமார் said...

அவர் ஆயிரத்தில் ஒருவர் போல ..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இருக்கட்டும்... இருக்கட்டும்...

தமிழ்க்காதலன் said...

அன்பு மீனா, வணக்கம். இந்தக் கவிதையின் உட்பொருள் நோக்குங்காள், இது பரம்பொருளை நினைத்துப் பாடப் பட்டது போல் உள்ளது. பேரன்பில் திளைக்கும் ஆன்மாவின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும். இந்த அன்பை துய்க்க ஒரு பக்குவம் வேண்டும். பாராட்டுகள். தொடருங்கள்.

ம.தி.சுதா said...

சில வரிகளில் சிலாகித்து விட்டீர்கள்...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)