புலி மானை அடித்துக் கொல்லும்
இயற்கை இறைவனின் படைப்பு
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ
மன நிலை சரி இல்லாத பெண்
பசிக்குப் பெண் இல்லாத ஆடவன்
அருகருகே வைத்துப் பார்க்கும்
இயற்கை இறைவனின் படைப்பு
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ
ஆதரவு இல்லாத அனாதைப்
பெண்கள் வெவ்வேறு விதத்தில்
பலியாகப் படும் இயற்கை
எந்த விதத்தில் தடுக்க முடியும்
நீயோ நானோ
புலி மானைக் கொல்வதில்
நியாயம் இல்லை என்று மான்
பேசிக் கொண்டு ஓட மறந்தால்
மறு கணமே புலிக்கு இரையாகும்
நியாயம் பேசாமல் தன்னை
வலுவாக்கிக் கொண்டு
ஆபத்தை துல்லியமாக
உணர்ந்து கொள்ளும் உயிர்களே
நெடுநாட்கள் நிம்மதியாக
வாழக் கூடும்
பல நல்ல மனங்கள் ஆபத்து
உனக்கு காத்து இருக்கின்றது
கூறியபோதும் தன நிலையை
மாற்றிக் கொள்ளாத அந்தப்
பெண் இறைவனை வேண்டி
மட்டும் பெறப் போவது
விமோசனம் அல்ல. விதியும்
வினையும் எப்படி ஆட்டிச்
செல்கின்றதோ அப்படியே
அவள் வாழ்க்கை
அமையக் கூடும்
இவற்றை உற்று நோக்கின்
அநியாயத்தில் அநியாயம்
இல்லை வினையும் விதியும்
விளையாடுகிறது என்றே
புரியும்.
அநியாயத்திற்கு அதிகமாக இடம்
கொடுப்பதும் அநியாயமாகும்
ஏமாற்ற இடம் கொடுப்பதும்
ஏமாற்றுவதே ஆகும்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
எல்லாம் விதியின் செயல் என்றால் அவன் செயல் என்ன சகோ ....
கவிதை நல்லாருக்கு சகோ எங்க நெடுநாட்கள் ஆளை காணவில்லை நலமாக உள்ளீர்கள் அல்லவா
எங்களுக்கு குடை பிடுத்து... நட்சத்திரமாக்கிய எங்களது ஆசான் " பாரத் பாரதீ"(பலத்த கைத்தட்டல்)
மன்னிக்கவும்.கவனக்குறைவால் மேலே உள்ள கருத்துரை தங்களின் தளத்தில் பதிவாகிவிட்டது.
எங்கே என்னைப்பற்றி(புலி) எழுது விட்டீர்களோ... என்ற பயத்தில்.
கவிதை அருமை.
அன்பு மீனா,
உங்களிடமிருந்து வித்தியாசமான சிந்தனைகள் உருப்பெறுகின்றன. வாழ்வியலின் நிதர்சனம் பேசி இருக்கிறீர்கள்.
பாராட்டுகள். உங்களின் எழுத்து நாளுக்கு நாள் மேருகேறிக்கொண்டிருக்கிறது.
நியாயம் பேசாமல் தன்னை
வலுவாக்கிக் கொண்டு
ஆபத்தை துல்லியமாக
உணர்ந்து கொள்ளும் உயிர்களே
நெடுநாட்கள் நிம்மதியாக
வாழக் கூடும்
இதில் சரியான முடிவைத் தந்திருக்கிறீர்கள்.
ஆனால் ஒரு இடத்தில் வேறு மாதிரி பேசி இருக்கிறீர்கள். மிக ஆழமான வார்த்தைகள் என்பதால்.... அது பற்றி நேரில் பேசுவோம்.
ஏமாற்ற இடம் கொடுப்பதும்
ஏமாற்றுவதே ஆகும்
யோசிக்க வேண்டிய வரிகள்!!
அருமையான வரிகள்
Post a Comment