Saturday, January 22, 2011

அன்பு அழகூட்டுதே

விழிகள் கொடுக்கத் துடிக்கும் கணம்
மறு விழிகள் எடுக்கத் துடிக்கும் கணம்
அமைந்தது நான்கு விழிப் பாலம்
பாலத்தில் ஊறுவது வாகனம் அல்ல
வெறும் எண்ணங்கள் மட்டுமே

நாளுக்கு ஒரு படி எண்ணங்கள்
அபிநயமாய் அன்பாய் ஊறிச்
செல்கின்றன. வெள்ளம் போல்
எண்ணங்கள் ஓடிப் பயனில்லை
பயனுண்டு திரளும் அன்பு
வெள்ளத்தால்

அன்பு கூட அழகூட்டுதே
அழகு கூட அன்பூட்டுதே
அழகூட்டும் அன்பு
அரு மருந்தாம்
அன்புஊட்டும் அழகு
அருமையான கலையாம்

கலை வாழ்வை அலங்கரிக்க
விழிகள் கலையை அலங்கரிக்க
கலையும் வாழ்வானது
வாழ்வும் கலையானது
வாழ்க்கைக் கலை உருவானது
வாழ்க்கை சுவாரசியம் ஆனது

3 comments:

Unknown said...

சிறந்த கவிதை...!

என்றும் நட்புடன்..
வைகறை
வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

arasan said...

கலை வாழ்வை அலங்கரிக்க
விழிகள் கலையை அலங்கரிக்க
கலையும் வாழ்வானது
வாழ்வும் கலையானது
வாழ்க்கைக் கலை உருவானது
வாழ்க்கை சுவாரசியம் ஆனது
//

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு மேடம் ...
நல்ல பதிவு ... வரிகளும் அதை தொடுத்த விதமும் அருமை ...
தொடருங்க

தமிழ்க்காதலன் said...

நல்ல நடையில் அருமையான உணர்வுகளை தந்திருக்கிறீர்கள். அழகுணர்ச்சியுடன் ஒரு கலை பார்க்கப் படும் போதுதான் கலை உயிர் பெறுகிறது. உங்கள் கவிதையும் அப்படியே. வாழ்த்துகள். தொடருங்கள்.