Tuesday, January 18, 2011

காலம் மாறிப் போச்சு

ஆப்பம் செஞ்சா ஆபீசுக்குப்
போமுடியலே

ஆபீசுக்குப் போனா ஆப்பம்
செய்ய முடியலே

காசு இருந்தா குளிர் சாதனம்
குளிர் சாதனம்னா நோ சமையல்

இட்லி செஞ்சா பசங்க சாப்பிட மாட்றா
பசங்க சாப்பிடற பீட்சா வரமாட்ரேண்ணுது

அடுத்த வீட்டுப் பொறியல் விரும்பி சாப்பிடற
நம் பொண்ணு நாம் செஞ்ச பொறியல் திரும்பி
கூட பார்க்க மாட்டேன்றா

கேட்டா அது வேற இது வேற ன்னு சொல்லி
சொல்லிக் காட்டறா

சமைச்ச பொருள் எல்லாம்
அடுக்கி அடுக்கி வைக்கிறா
சூபெர்மார்கெட்டில்

அவா அவா பை பையா
அள்ளிண்டு போறா

ஒரு நிமிஷம் சூடு பண்ணி
வயிறு உள்ளே தள்ளறா

போற போக்கில் வருடம் ஆனா
சமையல் ரூமே இல்லாம கட்டிருவா வீடு

பொறுத்துன்னா பார்க்க வேணும்

3 comments:

Speed Master said...

போற போக்கில் வருடம் ஆனா
சமையல் ரூமே இல்லாம கட்டிருவா வீடு

எதிர்கால உண்மை

aranthairaja said...

மாமி நீங்கோ ஆத்துல இருக்குறச்ச ஆப்பம் சுடுரதபத்தி நினைசெல்னா பரவால்ல...But ஆபிசுக்கு போகும்போதும் ஆப்பத்த பத்தியே நினைசெல்னா எப்படி..? அடுத்தாதுல போரியல் நன்னா பண்ணுறா அதான் உங்க பொண்ணுகூட அங்கபோயி சாப்பிடுறா.... உன் கைப்பக்குவம் சரியில்லடிம்மா...
ஆத்துல நன்னா ஆக்கிபோட்டா ஏண்டிம்மா ஹோட்டல்லயும் ரெடிமிக்சும் வாங்கி சாப்பிடபோரா....நீமட்டும் ஷேமமா இருந்தா மட்டும் போதாதுடிம்மா..மத்தவாளையும் ஷேமமா வச்சிக்க பழகணும். புரிஞ்சுதோ...?

Meena said...

அரந்தைராஜா அவர்கள், நன்றி. கருத்துக்கு நன்றி
மாமி குடும்பத்து மற்றும் அலுவலுக பொறுப்புகளை பல காலம் சரிவரச் செய்வதில் திணறி சற்று மிரண்டும் போய் விட்டார். அதனால் சமையல் சுருக்கமும் சமையலுக்கு ஆளும்.
டீன் ஏஜ் பொண்ணு சைகொலஜியே வேற. அவர் வீட்டில் செய்தது சாப்பிடாமல் இருப்பதற்கு இன்று பல
காரணங்கள் உண்டு. இந்த மாமி அய்யராத்து மாமி அல்ல
கவிதைக்கு மாமி பாஷை. அவ்வளவு தான்