Friday, January 14, 2011

சடங்கு

காலம் காலமாய் மனக் குமையலில்
ஆடவரிடம் பழக மறந்த பெண்
அவளுக்கு
ஆங்கிலேயப் பழக்கமான
கை குலுக்கலும் நல்ல ஒரு
கை கொடுக்கும் சடங்காயிற்று

குணமுள்ள நண்பரை
கை குலுக்கிய பின்னும்
புன்னகைக்க மறக்கும் சூழ்நிலை அவளுக்கு.
சடங்கும் அவளைப் பொறுத்த மட்டில் தன்
வேலையைச் செய்வதில் தவறுகிறது
இது அப்பெண்ணின் தனிப்பட்ட சூழ்நிலை

5 comments:

Philosophy Prabhakaran said...

ஒன்றும் விளங்கவில்லை மேடம்...

வினோ said...

செதுக்கப்பட்ட வட்டம் குறுகி விட்டதா அவளுக்கு ?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இது சடங்கா? அல்லது மடமையா?

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

ராம்ஜி_யாஹூ said...

பிலாசபி பிராபாகரன் போல எனக்கும் புரிய வில்லை

ரிஷபன்Meena said...

இந்த தலைமுறையினருக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.