Sunday, January 9, 2011

பக்தி எந்தன் காணிக்கை

அருந்தும் குடிநீரிலும் நீ
அனுதினம் உண்ணும் சிற்றுண்டியிலும் நீ
அடுத்த வீட்டு அக்கா கொடுத்த இனிப்பிலும் நீ

உடற்பயிற்சித் துணையிலும் நீ
உடன் அக்கறை காட்டும் அன்பனிலும் நீ
உற்சாகமாக பணி தரும் மேலாளரிலும் நீ

இயற்கைக் காட்சியிலும் நீ
இளவேனிற் காற்றிலும் நீ
இவர்கள் எழுதும் கவிதையிலும் நீ

இனிமையானப் பாடலிலும் நீ
இனிமையானப் பயணத்திலும் நீ

இதமான தியானத்திலும் நீ
இளக வைக்கும் யோகத்திலும் நீ

சுவாசக் காற்றிலும் நீ
இருதயத் துடிப்பினிலும் நீ

நீ என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்து
ஆதரிக்கும் இந்த வேளையிலே
உன்னை எனக்குத் தந்த
உயிரினங்களுக்கெல்லாம்
எந்தன் பக்தியை காணிக்கையாகச்
செலுத்துகிறேன்

நீ யாராக இருக்கும் என்று யோசிக்கும்
அன்பர்களை மேலும் கலங்க விடாமால்
நீ தான் மற்றவர் என் மீது காட்டும் அன்பு
இறையன்பு என்று முடிவில் உரைத்து விடுகிறேன்

7 comments:

சிவகுமாரன் said...

அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே.

----திருமூலரின் திருமந்திரத்தை நினைவுபடுத்தியது உங்கள் கவிதை.

தமிழ்க்காதலன் said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். உங்களின் மனம் புரிகிறது. தொடருங்கள்.

தினேஷ்குமார் said...

அன்பின் வடிவில் அழகான கவி

arasan said...

அழகான வரிகளை உள்ளடக்கிய கவி

Unknown said...

அய்யய்யோ...

உங்களுக்கும் எனக்கும் போன ஜென்ம உறவு இருக்கும்னு நினைக்கிறேன்..

நேத்து வீட்ல வெட்டியா இருக்கும் போது ஒரு கவிதை எழுதினேன்.. இன்னைக்கு போஸ்ட் பண்ணலாம்னு நினைச்சேன்.. இங்க வந்து பாத்தா வேற வரிகள் போட்டு நீங்க போஸ்ட் பண்ணிட்டிங்க..

நல்ல வேலை.. என்னோடது காதல் கவிதை... :)

போஸ்ட் பண்றேன்.. படிச்சு பாருங்க மீனா..

R.Gopi said...

சூப்பரா எழுதி இருக்கீங்க மீனா...

அனைத்திலும் நீ என்பதை அழகாக விளக்கி இருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்...

Unknown said...

சங்கரர் சொன்ன அகம் பிரம்மாஸ்மி, திருமூலர் சொன்ன அன்பே கடவுள்... இங்கே மீனா மேடத்தின் கைவண்ணத்தில்...