உமது அன்பில் கற்கண்டாய் கரைந்து
விடுகிறேன். உமது அன்போ என்னைத்
துவைத்து எடுத்துக் கொண்டிருக்கிறது
உமது புனித உறவு புல்லாங்குழலின்
கானமாய் என் மூளைக்குள் வலம்
வருகிறது. உமது புனிதம் என்னைத்
துயரில்லா சிகரத்துக்கு அழைத்துச்
செல்கிறது
உமது அன்பின் ஆழம் அலைகடலின்
அடியையும் என்னைத் தொடச் செய்கிறது
ஆழம் என்றுமில்லாமல் இன்று புதிய
சக்தியை என்கையான கரையில்
கரை சேர்க்கிறது
உமது மேல் நான் கொண்ட மதிப்பு
எனது சுயமதிப்பை பல நூறு மடங்கு
பெருக்குகின்றது. நான் கொண்ட மதிப்பு
நான் இருக்கிறேன் நாளும், நாலும் வந்தால்
என்ன வராவிட்டால் என்ன என்று
என்னைக் கேட்காமல் கேட்கின்றது
அன்பு, புனிதம், ஆழம் , மதிப்பு
இவற்றை வானவில் நீளத்துக்கு
பெற்றதனால் மலை போன்ற
துயர அலைகள் சுக்கு நூறாய்
சிதைந்து போய் விட்டன
மீதம் இருப்பது அழகிய
தென்றல் காற்று ஒன்றே
ஒன்றா இரண்டா உமது என்று குறிப்பிட
நல்லெண்ணம் கொண்ட ஆடவர் கூட்டமே
உமதுள் அடங்குவர். சுபம் என்றே நாளும்
உரைக்கிறேன் நானிங்கு. சுபத்தை விவரிக்க
கவிதைகள் எழுதும் நாள் இன்று
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
துயரில்லா சிகரம் - துயரில்லா சிந்தனை :)
அன்பு, புனிதம், ஆழம் , மதிப்பு
இவற்றை வானவில் நீளத்துக்கு
பெற்றதனால் மலை போன்ற
துயர அலைகள் சுக்கு நூறாய்
சிதைந்து போய் விட்டன.. என்னவொரு அற்புதமான சிந்தன ..
வாழ்த்துக்கள்..
நல்ல நல்ல படைப்ப்களை வழங்கி வரும் உங்களுக்கு மிக்க நன்றி
அன்பு மீனா, உங்களின் கவிதை என்னை மூச்சை பிடித்து தியானிக்க சொல்கிறது. மிகச் சரியான புரிதலில், அழகாய் ஆழம் தொட்டிருக்கிறீர்கள். தொடர்ந்து இது போல் நல்ல எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
அன்பு, புனிதம், ஆழம் , மதிப்பு
இவற்றை வானவில் நீளத்துக்கு
பெற்றதனால் மலை போன்ற
துயர அலைகள் சுக்கு நூறாய்
சிதைந்து போய் விட்டன
மீதம் இருப்பது அழகிய
தென்றல் காற்று ஒன்றே
உங்களின் நிலை பேசும் இடங்கள்.
அருமை... அருமை...
உமது புனித உறவு புல்லாங்குழலின்
கானமாய் என் மூளைக்குள் வலம்
வருகிறது. உமது புனிதம் என்னைத்
துயரில்லா சிகரத்துக்கு அழைத்துச்
செல்கிறது
இங்கே புனிதம் புரிகிறது.
தங்களின் உணர்வு படைப்புக்கு என் வாழ்த்துக்கள்.
//உமது என்று குறிப்பிட
நல்லெண்ணம் கொண்ட ஆடவர் கூட்டமே உமதுள் அடங்குவர்.//
அனைத்தையும் “ஒன்றாய்”க் காணும் நெற்றிகண்ணில் உற்றுப்பார்க்கத் துவங்கியிருக்கிறீர்கள். உங்களிடம் அன்பே மேலோங்கி இருக்கும். இன்னும் பெருகட்டும் மீனா.
அருமை. இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை குறைத்திருக்கலாம்.
Post a Comment