போனவற்றை போற்றியும் பயனோ?-அதில்
நல்லவையோ கெட்டவையோ பயனோ? - இன்று
நடப்பதையே நலமாகவே நடத்திவிடு நடத்தினால்
காணு நலம் காணு
துரத்துகின்ற எண்ணமதை துரத்து - அதில்
துணிவாகவே துயரமதை துரத்து -இன்று
துரத்துகின்ற துயரமும் தூரமாகக் கிளம்பினால்
காணு நலம் காணு
எண்ணமும் உன்னுடைய எண்ணமே -அதில்
எல்லாமும் உந்தன்கை வண்ணமே -இன்று
எண்ணங்கள் எல்லாமும் வந்துவிடும் வண்ணமாக
காணு நலம் காணு
உந்தன்கை ஆளுகின்ற கட்சி - அதில்
நீயுமல்ல எதிர்க்கின்ற கட்சி - இன்று
நீதோண்டிய குழியுமையே முற்றுமாய் மூடிடவே
காணு நலம் காணு
நீஉனக்கு நல்லதொரு நண்பன் - அதில்
நீயில்லை அந்தஒரு பகைவன் -இன்று
நீஉந்தன் ஆற்றலையும் அறிந்துகொள் புரிந்துகொள்
காணு நலம் காணு
Wednesday, January 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்லாருக்கு கலக்குங்க
உந்தன்கை ஆளுகின்ற கட்சி
உந்தன் மனச்சாட்சி அதன் எதிர்க்கட்சி.
நல்ல கவிதை. சில கேள்விகளையும் எழுப்புகிறது.
//போனவற்றை போற்றியும் பயனோ?-அதில்
நல்லவையோ கெட்டவையோ பயனோ?//
அனுபவ பாடங்கள் போனவற்றிலிருந்து தானே புரிந்துக்கொள்ள வேண்டும்?
அழகு...... மேடம் ...
நல்ல வரிகளை கொண்ட கவிதை
//போனவற்றை போற்றியும் பயனோ?-அதில்
நல்லவையோ கெட்டவையோ பயனோ?//
அனுபவ பாடங்கள் போனவற்றிலிருந்து தானே புரிந்துக்கொள்ள வேண்டும்?
மனது அதிகமாக பழசை நினைக்காமல் நிகழ்காலத்தில் இருக்க வைப்பது அவசியம்
என்ற கருத்துக்காக எழுதியது. நீங்கள் சொல்லுவது போல் , அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்
கொள்வதும் அவசியம் தானே .
Post a Comment