அம்மாவிற்கு என்ன கஷ்டமோ
உன்னைத் திட்டுகிறாள்
கஷ்டத்தில் திட்டிவிட்டு
திட்டியதற்காக தனியே
கஷ்டப்படும் அம்மாவோ அவள்
திட்டும் அம்மா
உள்ளுக்குள் கனிந்த மனம்
நம்பவாப் போகின்றாய் நீயும்
எது எப்படி ஆயினும்
அம்மா ஒரு உயிர் தான் உனக்கு
திட்டாத உயிர்கள் ஆயிரம் இருக்க
திட்டும் உயிரை மட்டுமே நீ நினைக்காது
தெள்ளத் தெளிவாய் நல்லதையே
மட்டும் கண்டு கொண்டிரு
நல்லது எங்கிருந்தாலும்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
கஷ்டத்தில் திட்டிவிட்டு
திட்டியதற்காக தனியே
கஷ்டப்படும் அம்மாவோ அவள்
:)
அம்மா திட்டுவதெல்லாம் நல்லதற்கே கவிதை நன்று ...
இது என் மின்னஞ்சல் முகவரி jemdinesh@gmail.com
தினம் ஒரு கவிதை..
உங்களிடம் நிறையக் கற்றுக்கொள்ளலாம்
கா.வீரா
////திட்டும் அம்மா
உள்ளுக்குள் கனிந்த மனம்
நம்பவாப் போகின்றாய் நீயும்////
ஆமாக்கா... அம்மா தானே ஒரு சொல் உலகம்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
ஆற்றாமை போக வழி இருக்கா என இயற்கை அன்னையின் முழு உலகிலும் வண்ணங்கள் நோக்கி நல்லதை மட்டும் நாடி கவி விளையாட்டு விளையாடுவோம் வா தோழி.
அன்புள்ள மீனா,
கவியின் வடிவிலான தங்களின் அன்பான ஆறுதலுக்கு மற்றும் இனிய அறிவுரைக்கும் என் நன்றிகள்...
நடப்பவை எல்லாம் நல்லத்திற்கே என்ற உணர்வோடு நானும்... நல்லதாகவே எல்லாவற்றையும் எண்ணிக்கொண்டு...
சிறந்த கவிதை.
//கஷ்டத்தில் திட்டிவிட்டு
திட்டியதற்காக தனியே
கஷ்டப்படும் அம்மாவோ அவள்//
Post a Comment