Monday, January 3, 2011

முழு உலகம்

அம்மாவின் அன்பு கடல் போன்றது
ஒத்துக் கொள்கிறேன்

அண்ணனின் அன்பு கடலின் அலை போன்றது
ஒத்துக் கொள்கிறேன்

ரத்த பாசமே இல்லாமல் தோழி காட்டும் அன்பு
கடலை விட உயர்ந்தது என்றேத் தோணுகிறது

அம்மா தன அன்பைக் கொட்டி பிறரில் அன்பின்
வாசத்தை நுகர வைத்தாள்

கிருஷ்ணன் வாயைத் திறந்து காட்டி
யசோதைக்கு முழு உலகம் காட்டினான்

என்னைப் பொறுத்த வரை முழு உலகமும்
மற்றவர் என் மீது காட்டும்
அன்பில் அடங்கி உள்ளது

6 comments:

ஆனந்தி.. said...

//என்னைப் பொறுத்த வரை முழு உலகமும்
மற்றவர் என் மீது காட்டும்
அன்பில் அடங்கி உள்ளது//

முத்தாய்ப்பாய் சொன்ன இந்த வரிகள் நச் மீனா...

Anonymous said...

அமோதிக்கிறன், இறுதிச் சந்தம் மிகவும் அருமையான வரிகள்

தினேஷ்குமார் said...

என்னைப் பொறுத்த வரை முழு உலகமும்
மற்றவர் என் மீது காட்டும்
அன்பில் அடங்கி உள்ளது

உண்மைதான் கவிதை நன்று

வினோ said...

/ ரத்த பாசமே இல்லாமல் தோழி காட்டும் அன்பு
கடலை விட உயர்ந்தது என்றேத் தோணுகிறது /

உண்மை தாங்க சகோ...

arasan said...

அற்புதம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

// ரத்த பாசமே இல்லாமல் தோழி காட்டும் அன்பு
கடலை விட உயர்ந்தது என்றேத் தோணுகிறது//

உண்மையான வரிகள்...