ஒவ்வொரு கல்லாய் கையில் எடுத்து
ஆடிய கூழாங்கல் ஆட்டமும்
ஒவ்வொரு ரன்னாய் ரன் செய்து
ஆடிய கிரிக்கெட் ஆட்டமும்
ஒவ்வொரு கட்டமாய் கடந்து சென்று
ஆடிய நொண்டி ஆட்டமும்
அன்று எனக்கு கிட்டிய
பாக்கியம்
ஒவ்வொரு கவியாய் கவி எழுதி
மற்றவர் படித்திட கொடுத்தலும்
ஒவ்வொரு கருத்துரை கருத்துடன் எழுதி
மற்றவர் மகிழ்ந்திட கொடுத்தலும்
ஒவ்வொரு புதிய பின்பற்றுபவரை
மனதில் மகிழ்ந்து முடித்தலும்
இன்று எனக்கு கிட்டும்
பாக்கியம்
கிரிக்கெட் மட்டுமா விளையாட்டு
கவி பதிப்பதுமே விளையாட்டு
விளையாட்டு எதுவாயினும்
நம்மைப் புதுப்பிக்கின்றது
உலகை மறக்கச் செய்கின்றது
இன்றைய நாட்களுக்குத்
தேவையானது
வாருங்கள் கவி விளையாட்டு
விளையாடுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அசத்தல் ....
ம்ம்ம்ம். தொடருங்க மேடம் ....
ஆஹா.. நம்மளுக்கு கிரிக்கேட் தான் ரொம்பப் பிடித்த விளையாட்டு...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
தங்களின் இந்த விளையாட்டின் வழியே நான்(ம்) சிறுவயதில் விளையடிய விளையாட்டுகளும் கண்ணில் வந்து செல்கின்றது...
பசுமை மாறா நினைவுகளாக நெஞ்சில்...
தஞ்சை வாசன், சுத்த, அரசன் அவர்களுக்கு,
உங்களுடைய கருத்துரைகளுக்கு நன்றி.
கிரிக்கெட் ஆட்டம் விளையாட ஆள் இல்லை. அதான் கவி எழுதும் நண்பர்களை எல்லாம்
புது குழு, புது ஆட்டக் காரர்களாய் கண்ணிலும் நெஞ்சிலும் புகுத்திக் கொள்கிறேன்.நிகழ காலத்தில் ஒவ்வொரு கணத்தையும் ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்
நல்ல விளையாட்டு..
கா.வீரா
Post a Comment