Saturday, January 1, 2011

வழி இருக்கா

பிறந்து வந்த பொழுது
புதுப் பிஞ்சா வந்த கனியே

ரெண்டாம் பருவத்துல
ரெண்டு ரெண்டா
சேட்டை நீ செஞ்சதுல
அசந்து போனேன், கொஞ்சம்
அதிசயத்துப் போனேன்

மூணாம் பருவத்தில
மூணு வார்த்தை நீ பேசுனதுல
குழைஞ்சு போனேன், நெஞ்சம்
நிறைந்து போனேன்

நாலாம் பருவத்தில
நாலு வரி நீ எழுதினதுல
நல்ல கையெழுத்த
நான் கண்டேன்

பத்தாம் பருவத்தில
குட்டிப் பனை மரமாய்
நீ வளர்ந்ததில நானும்
வளர்ந்தேன்

உன்னோடு ஒட்டிக்
கொண்ட காலம்
வசந்த காலம்

இப்போ என்னை
விட்டுட்டு ஓடிடுவே
கல்லூரியில் கற்பதற்கு
நானும் வந்திடவே
வழி இருக்கா
சொல்லடி
என் அருமைக் குழந்தே

6 comments:

keerthanav@gmail.com said...

kavithaiyai vittu viziyum manamum vilaka marukkiRathu

R.Gopi said...

நல்ல எண்ணங்களையும், அழகு தமிழையும் கொண்டு எழுதப்பட்ட இந்த பதிவு அற்புதம்...

தங்களுக்கும், குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மீனா....

HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

கோலிவுட் - டாப்-20 நடிகர்கள் http://edakumadaku.blogspot.com/2010/12/20.html

aranthairaja said...

நன்றி தோழியார் மீனா அவர்களே...
" நரைகூடி கிழப்பருவ மெய்தி
கொடுங்கூற்றுக் கிறையென பின்மாயும்
சில வேடிக்கை மனிதரைபோலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"

நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். சோதனைகள் நம்மை பலப்படுத்துமேயன்றி பலவீனப்படுத்தாது. வரும்காலம் நமதாகட்டும். வாழ்க்கை நம் வசமாகட்டும். வசந்தம் நம் வாசல் வரட்டும். வாழ்வோம் வாழ்விப்போம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

aranthairaja said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Meena said...

நான் யார், கோபி, அரந்தைராஜா, சமுத்ரா உங்களுடைய கருத்துரைகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி
மீண்டும் வருக

KALAM SHAICK ABDUL KADER said...

கண்ணீர் விடவைத்த கண்ணானப் பாடலிது
எண்ணத்தில் பூத்த மலர்

“கவியனபன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டம் உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/