Monday, November 21, 2011

அன்பும் கருணையும்

மயக்கமதை மறைந்திடச் செய்ய
கவலை தனை கணத்தில் கலைத்திட
சினமதை சிறு கடுகாய் சிதைத்திட
அன்பு கருணை முகர்ந்திடு

நற்செயல்  ஒன்று
அன்பு கருணை

நற்செயலுக்கு நன்றி நவில்தல்
அன்பு கருணை

பணிவிடை குறைந்திட்ட வேளை
பண்புடன் ஆடவன்
அன்பு கருணை

குடும்ப அமைதிக்கு தியாகம்
அன்பு கருணை

குற்றம் கண்டு பொங்காதிருப்பது
அன்பு கருணை

எவ்விடத்தும் அன்பு கருணை
நோக்கிய பின்

அகத்துள் உறையும்
அன்பு கருணை

5 comments:

arasan said...

நெடுநாட்கள் கழித்து சிறப்பான கவிதை...
வாழ்த்துக்கள் மேடம்

ம.தி.சுதா said...

////குடும்ப அமைதிக்கு தியாகம்
அன்பு கருணை////

கரங்கள் ஓய்ந்திருந்தாலும் வரிகள் உயிரோடு தான் இருந்திருக்கிறது போல...

அருமைங்க...

சீனுவாசன்.கு said...

அருட்பெருஞ்சோதி!
தனிப்பெரும் கருணை!!

சிவகுமாரன் said...

வள்ளலாரைக் கண்டேன் தங்கள் வரிகளில்

Yaathoramani.blogspot.com said...

கருணைக்கான விளக்கமாக அமைந்த தங்கள் கவிதை
மிக மிக அருமை
தங்கள் படைப்புகளைத் தொடர்வதில் பெருமிதம் தொடர்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்