Friday, March 11, 2011

சாப்பிட மறந்தோர்

தவிப்பர் பலர் உண்ண உணவின்றி
தவிப்பர் சிலர் உணவிருந்தும் பசியின்றி

அளவாய்ச் சாப்பிடு என்றனர் சான்றோர்
சாப்பிட மறவாதே என ஏன் எவரும்
சொல்லிப் போகவில்லை

சாப்பிட மறந்தவரை நாளும் காண்கிறேன்
சாப்பிட பயந்தவரையும் நாளும் காண்கிறேன்

எடைக்குப் பயந்து சாப்பிட மறுக்கும்
வளர்ந்த மனிதர்கள்

அவசர உலகில் சாப்பிடத் தவறும்
வளரும் குழந்தைகள்

சாப்பிடாமல் வாழும் உயிர்களை
சாப்பிட வைத்து வாழ வை
நான் வணங்கும் தெய்வமே!

1 comment:

தமிழ்க்காதலன் said...

நல்ல எண்ணங்களை விதைத்து, உள்ளங்களை அள்ளிச்செல்கிறீர்கள். அருமையான வரிகள். கடைசியாய் இருக்கும் மூன்று வரிகள் மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.