Monday, February 7, 2011

பூரண வாழ்க்கை

ஊரெல்லாம் குறையோடு நபர்கள் இருக்க
நீ மட்டும் பூரணமாய் வாழ்வதெதற்கு?

பூரணமாய் வாழ்வதே குறை யாயிற்றே

பூரணமாய் வாழத் துடிக்கும் போது
மற்றவரை துடிக்கச் செய்யாதவர் யாரோ?

பூரணமாய் வாழத் துடிக்கும் போது
தன்னைத் தானே துன்புறுத்துவதும் ஏனோ?

பூரணமான வாழ்க்கையும் பூரணம் அல்லவே
குறையும் குறை அல்லவே

பூரண சந்தோசம் என்று ஒன்று இல்லையே
பூரண பக்தி என்று ஒன்று இல்லையே
பூரண அன்பு என்றும் கூட ஒன்றும் இல்லையே
பூரண வாழ்க்கை மட்டும் எங்கிருந்து வர முடியும்?

4 comments:

தமிழ்க்காதலன் said...

உங்களின் பூரணமற்ற வரிகளில் பூரணம் ஒளிந்து ஒளிர்கிற அழகு இரசித்தேன். பூரமாவது எது...? புதிரான பல புதிர்களுக்கு விதையானக் கேள்வி..? இது பற்றி ஒரு பதிவு போடலாம் எனத் தோன்றுகிறது. வாழ்க்கை ஒரு தேடலுடன் நீளுகிற போது மட்டுமே இரசிக்க முடியும். தேவைகள், தேடல்கள் தீர்ந்து போன வாழ்வு ருசிக்காது என்பதால் குறை என்பதே நிறை எனச் சொன்ன விதம் அருமை.

ம.தி.சுதா said...

///பூரண சந்தோசம் என்று ஒன்று இல்லையே////
ஆமாம் உண்மையாகத் தான்..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

பாரி தாண்டவமூர்த்தி said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்

பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/4.html

எல் கே said...

நல்லா இருக்குங்க