Tuesday, December 21, 2010

உடல் காதல்

அன்பும் காதலும்
மட்டுமே
என் சொத்துக்கள்

சொத்துக்கள்
அமுதசுரபியாய்
ஆனதால்
கலக்கம்
என்னை விட்டு என்றோ
விடை கொடுத்திட்டது

புது வரவு ஒன்றுக்கு
காத்துக் கிடக்கிறேன்
ஆவலோடு

நான் காத்திருப்பது
எனக்காக
அல்ல
என் காதலில், அன்பில்
உறைந்திருக்கும்
உயிரினங்களுக்காக

அன்பைக் கொடுத்து
எதையும்
பெற முடியும்
என்று அறிந்து
கொண்டேன்

அதனால் நான்
தேடும் உடல்
காதலே நீ மிக
அருகில்
உள்ளாய்
உணருகிறேன்

3 comments:

Bharath_HM said...

//அன்பைக் கொடுத்து
எதையும்
பெற முடியும்
என்று அறிந்து
கொண்டேன்//
அன்பே சிவம் ..

aranthairaja said...

//நான் காத்திருப்பது
எனக்காக
அல்ல
என் காதலில், அன்பில்
உறைந்திருக்கும்
உயிரினங்களுக்காக //

அன்பும் நேசமும் மனிதம் ஈர்ப்பது மட்டுமல்ல... யாவர்க்கும் பொதுவாம். மனிதம் உயர்வுற காதல் செய்வோம் எவ்வுயிரையும்.

அன்புடன்,
ராஜ்குமார்(அறந்தைராஜா)

http://namatchivaya.blogspot.com/2010/12/blog-post_17.html

NKS.ஹாஜா மைதீன் said...

நன்றாக இருக்கிறது எழுத்து நடை....