Tuesday, October 9, 2012

புதிய தேரோட்டி

மனம் பித்தானாலும்
பதினாறு  பெற்று

விம்மிய மனம் விலகி
வலிய மனம் விழித்தெழுந்து

உடற் தேரை
மனம் முற்றிலும் 
இழுத்துச் செல்ல

முற்றிலும் புதிய
தேரோட்டி
ஆகி விடில்

இன்னல்கள் இன்னும்
வாட்டி விடா

Sunday, September 30, 2012

இன்று முதல்


அனைவர்க்கும் தாயாகி விடு 
அனைவரையும் வாழ்த்திவிடு

எளியவர்க்கு பிரார்த்தித்து விடு
எளியவர்க்கு உதவி விடு

நல்லதையே கண்டு விடு
நல்ல மனம் வலிய மனம் பெற்று விடு

உன்னை நீயே உயர்த்திவிடு
என்றும் எதிலும் உயர்த்திவிடு

அனைவர்க்கும் தாயாகி விடு 
அனைவரையும் வாழ்த்திவிடு

Friday, July 27, 2012

தாயன்பு

தாயன்பை பெற்றுப்பார் பிறரிடத்து
எத்தனை பலம்  பின் தெரியும் 

புகழ், பணம் சரிந்த பொழுது
தலை தூக்கி விடும் தாயன்பு

மனம் நொந்த பொழுது
அள்ளித் தரும்  நிம்மதி தாயன்பு

தாயாய் சேயுடன் தவிக்கும் பொழுது
தவிப்படங்கும்  தாயன்பு கண்டு

தாயன்பு காண தேவை இல்லை
தாய் அருகில்

தாயன்பைத் தர வல்லோர் 
அன்பு காட்டும் ஒவ்வொருவரும்

Sunday, July 15, 2012

வளமான வாழ்க்கை

ஏன் ஏன் கேட்ட உயிர்
எப்படி எப்படி என எண்ணிப்
பழகும் காலம் வினை
நீங்கும் காலம்

ஏன் என்று உடையாது 
எப்படி திருத்த  விடை
அறிந்து

சவால்  சந்திக்கும்
திறன் கொடு 
இறைவனை வேண்டி

இறைவழி என்வழி
என்வழி இறைவழி
என உணர்ந்து

பிறர் மகிழ்ச்சி
தன் மகிழ்ச்சி
அனுபவத்தில் அறிந்து

வாழும் வாழ்க்கை
வளமான வாழ்க்கை

Sunday, April 22, 2012

இதயத் துடிப்பில் சேவை

மனதை சேவைக்கு
அர்ப்பணித்து

நொடி ஒன்றிலும்
சேவை நோட்டத்துடன்
செயல்பட்டு

இழந்த வலிமை
மீண்டும் பெற்று

சேவை புரியும்
வழி முறையில்
புதுமை புகத்தி

குவியும் எண்ணப் படலங்களை
சேவைக்கு திசை திருப்பி

தனக்கும் தானே
சேவைகள் செய்து

சேவைத் துறையினர்
சேவை மனமுடையோர்
இவருடன் சேர்க்கை சேர்ந்து

சேவையை இதயத் துடிப்பில்
சேர்த்து விட்டால்
மற்றவர் உள்ளம் அமைதி பெற
வழி காட்டவும் முடியும் நம்மால்.

Sunday, April 15, 2012

பழக்கத்தை குணப்படுத்து

பழக்கத்தை குணப்படுத்து
வரவிருக்கும் நோய் கூட
வர மறந்து விடும்

நோயின் முதற்குறி கண்டதும்
பழக்கத்தை குணப்படுத்து
நோய் தன்னை இழந்து விடும்

நோய் வந்தபின்னும்
பழக்கத்தை குணப்படுத்து
நோய் மௌனித்து விடும்

முக்கால் பட்சம் உபாதைக்கு
நீயே மருத்துவன்
இதை அறிந்த பின்னும்
பழக்கத்தை குணப்படுத்து

Saturday, April 7, 2012

தூணிலும் இருப்பார்

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
தக்க துணையிலும் இருப்பார்

நல்மக்கள் கூடும் அவையிலும்
பிணி தீர்க்கும் பணி கொண்ட
நல்மக்கள் கரங்களிலும்
இருப்பார்

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
தக்க துணையிலும் இருப்பார்

சேவை சிறப்பாகச் செய்வர்
நல்மக்கள் அவர்தம் சொற்களிலும்
சேவைக்கு தன்னை அர்ப்பணித்த
ஒரு நல்மகன் அவர்தம் எழுத்திலும்
இருப்பார்

அருகிலே மிக அருகிலே
தாயைப் போல் இருப்பார்
கண்டு கொண்டால் தெரியுமே
அவர் பெருமை

அவர் இருக்கும் நிலை கண்டதும்
கலக்கம் என்ற சொல்லுக்கு
வேலை இல்லை அதிகம்
அவர் இருக்கும் நிலை கண்டதும்
கலக்கம் என்ற சொல்லுக்கு
வேலை இல்லை அதிகம்